தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்

சர்ச்சைக்குள்ளான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்காக 07 பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில வினாக்கள் கசிந்தமையினால் பிரச்சினையான சூழ்நிலை உருவானதுடன், பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். அத்துடன், புலமைப்பரிசில் வினாத்தாள் வெளியானமை Read More

Read more

வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்புவசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் (SLFR) தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. குறித்த விடயம் இலங்கை மத்திய வங்கியின் (Central Bank of Sri Lanka) சமீபத்திய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, லக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் Read More

Read more

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை….. வெளியான அறிவித்தல்!!

அனுராதபுரம் (Anuradhapura), மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளை இம்மாதம் 18ஆம் திகதி முதல்(18/06/2024) 20ஆம் திகதி(20/06/2024) வரை மூடப்பட உள்ளதாக வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பொசன் தினத்தை முன்னிட்டு  விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து வரும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனுராதபுரம் உயர்தரப் பாடசாலை, ஸ்வர்ணபாலி Read More

Read more

தண்டவாளத்தில் ஓடிய பேருந்து: காவல்துறை எடுத்த நடவடிக்கை

தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு முன்னெச்சரிக்கை எதுவுமின்றி தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்தார். கொழும்பு – எம்பிலிப்பிட்டிய சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். புவக்பிட்டியவில் உள்ள களனிவெளி தொடருந்து மார்க்கத்தில் சாரதி, பேருந்தை இயக்கிச் செல்லும் பல காணொளிகள் சமூக Read More

Read more

மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பாடசாலைகள் மட்டத்திலிருந்து சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பரிசளிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இதனைத் தெரிவித்தார். போட்டிகளுக்கு பாடசாலை மாணவர்களை தயார்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கும், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவுறுத்துவதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். வரவிருக்கும் கல்வி சீர்திருத்தங்களில், மாணவர்கள் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாமல் தொழில்துறை மேம்பாட்டுத் துறைகளிலும் ஈடுபடுவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் Read More

Read more

மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை செல்லும் 28 வீதமான பிள்ளைகள் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அந்தப் பிரதேசத்திலுள்ள பிள்ளைகளின் பாடசாலை வருகையும் கணிசமாகக் குறைந்துள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறுகிறார். இலங்கையில் பாடசாலை செல்லும் குழந்தைகளில் 16 வீதமானோர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய மருத்துவ சஞ்சிகை ஒன்று தெரிவித்துள்ளது. அநுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் பெரும்பான்மையான சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் Read More

Read more

கொழும்பின் ஏழு முக்கிய இடங்களுக்கு ISIS பயங்கரவாதத் தாக்குதல் திட்டம்….. விசாரணைகள் ஆரம்பம்!!

கொழும்பில் உள்ள ஏழு முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்த ஐ.எஸ் ஐ எஸ் அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று (05) கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்கவிடம் இது தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொழும்பில் நாடாளுமன்றம், துறைமுகநகரம், கங்காராமய உள்ளிட்ட ஏழு இடங்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலை நடத்தும் திட்டம் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தகவல் Read More

Read more

தென்னிலங்கையில் ஒரே நாளில் நடந்த பாரிய பேருந்து விபத்துகள்!!

இலங்கையின் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் சுமார் நான்கு பேருந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சிலர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜுகம விபத்து இந்த நிலையில், நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பகுதியில் பாரவூர்தியுடன் தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வதுபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய Read More

Read more