சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன, நிதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரும் இராஜினாமா!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். மஹிந்த ராஜபக்சவை தொடர்ந்து சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவி விலகியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது நிதி அமைச்சர் அலி சப்ரியும் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

மருந்துகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அவசர அறிவித்தல்!!

மருந்துகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு உதவ சுகாதார அமைச்சு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது. மருந்துகளை பெற்றுக்கொள்வதில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அமைச்சுக்கு அறிவிக்க முடியும் என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். இதன்படி, மருந்துகளைப் பெறுவது தொடர்பான புகார்கள் மற்றும் சிக்கல்களை 1999 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். டொலர் நெருக்கடி காரணமாக இலங்கை தற்போது கடுமையான மருந்துப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளமை Read More

Read more

அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

இதுவரையில் அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. ஆனாலும், அரச நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பான விசேட சுற்றறிக்கை அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முன்னதாக சுகாதார அமைச்சில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார சன்ன Read More

Read more

சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில் இன்று முடிவு!!

சுகாதார சேவை தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில், இன்று அதன் நிறைவேற்றுக் குழு ஆராயவுள்ளது. இருப்பினும், சுகாதார அமைச்சு இறுதியாக தங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்து எழுத்து மூல ஆவணத்தை தம்மிடம் கையளிக்க வேண்டும் என அதன் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். அந்த ஆவணம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், பணிப்புறக்கணிப்பைக் கைவிடுவது தொடர்பில் கலந்துரையாட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   இதேவேளை, தாதியர், இடைநிலை மற்றும் நிறைவுகாண் சேவை உள்ளிட்ட சுகாதார Read More

Read more

கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்காக அதிவிசேட வர்த்தமானி!!

கொரோனா தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை சுகாதார அமைச்சரினால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது. சுகாதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களில் கொரோனா தொற்றுக் குறைவடைந்திருந்த நிலையில், மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Read more

மீண்டும் பயணத்தடை/பொது முடக்கமா….. MOH வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மீண்டும் பொதுமுடக்கம் அல்லது பயணத்தை ஒன்றிற்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சுகாதார சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தனிநபர்களிடமிருந்து நாட்டை முடக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவ்வாறு முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more

எதிர்வரும் திங்கள் முதல் பழையபடி பாடசாலைகள் நடைபெறும்!!

எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக அனைத்து மாணவர்களையும் ஒரே தடவையில் பாடசாலைக்கு வரவழைப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை வௌியிடவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் Read More

Read more

முடிவுகளுக்காக காத்திருக்கும் இலங்கை!

கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் வெளிநாடுகளில் உள்ள வல்லுநர்கள் நடத்திய சோதனைகளின் முடிவுகளை இலங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முடிவுகள் கிடைத்தவுடன் முதல் கொரோனா தடுப்பூசிகளுக்கு பதிலாக வெவ்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்துவது குறித்து இலங்கை முடிவெடுக்கும் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சில நாடுகளில் தடுப்பூசிகளைக் கலந்து செலுத்தும் செயற்பாடு நடைமுறையில் உள்ளது. ஏனைய நாடுகளில் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை கலப்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் செய்தித் Read More

Read more