புதிய அமைச்சுக்கள் உருவாக்கப்படடன….. அதிவிசேட வர்த்தமானி மூலம் அரசாங்கம் அறிவிப்பு (முழுமையான விபரங்கள்)!!
புதிய அமைச்சு பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியாகியுள்ளது.
அத்துடன்,
குறித்த அமைச்சுகளின் கீழ் நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் என்பன உள்ளடங்குவதாகவும் சுட்டிக்காட்டப்படுள்ளது.
இன்றைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி பின்வரும் அமைச்சு பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன .
- மகளிர், சிறுவர் அலுவல்கள் அமைச்சு.
- சமூக வலுப்படுத்துகை அமைச்சு.
- தொழிநுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு.
இதற்கமைய,
பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த சில நிறுவனங்கள் தொழிநுட்ப மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த அமைச்சின் கீழ்,
- ஸ்ரீலங்கா டெலிகொம்
- தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு
- தேசிய முதலீட்டுச் சபை
- ஆட்பதிவு திணைக்களம்
- குடிவரவு குடியகல்வு திணைக்களம்
- துறைமுகநகர் பொருளாதார திணைக்களம்
- தரக்கட்டளை நிறுவகம்
- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவகம் (ICTA)
- தாமரை கோபுரம்
- கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம்
என்பன உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.