#Ministry of finance

LatestNewsTOP STORIES

சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன, நிதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரும் இராஜினாமா!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். மஹிந்த ராஜபக்சவை தொடர்ந்து சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவி விலகியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது நிதி அமைச்சர் அலி சப்ரியும் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

இதுவரையில் அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. ஆனாலும், அரச நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பான விசேட சுற்றறிக்கை அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முன்னதாக சுகாதார அமைச்சில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார சன்ன Read More

Read More
LatestNewsTOP STORIES

அரச சேவைகளின் செலவினங்களைக் கட்டுப்படுத்தி அடுத்த வழி பார்க்கும் அரசின் விசேட சுற்றறிக்கை!!

அரச சேவைகளின் செலவினங்களைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். மகிந்த சிறிவர்தனவால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விசேட சுற்றறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சு, அரசின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் முறையையும் வலியுறுத்தியுள்ளது. திட்டச் செலவுகள், எரிபொருள் குறைப்பு, தகவல் தொடர்புச் செலவுகள், நலன்புரி மற்றும் நிவாரணச் செலவுகளை இடைநிறுத்துதல், அரச துறை ஆட்சேர்ப்பு போன்ற பல அரச சேவைச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் சிறப்பு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சுக்கள், மாகாண சபைகள், மாகாண சபைகளின் Read More

Read More