மீண்டும் கொரோனா அலை….. உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதிர்ச்சி தகவல்!!

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முற்றாக நீங்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜெனீவாவில் இடம்பெற்ற 76 ஆவது உலக சுகாதார மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போதைக்கு பாதிப்புகள் அதிக அளவு இல்லாததால் கொரோனா வைரஸ் அவசரநிலையில் இருந்து மட்டுமே, நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தொற்று வரும் காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய திரிபுகளாக உருமாறும் எனவும் அது உயிருக்கே Read More

Read more

நெருக்கடியிலும் மீண்டும் பொதுமக்களுக்கான அடுத்த கட்ட தடுப்பூசி ஆரம்பம்!!

நாடளாவிய ரீதியில் மீண்டும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கை மக்களுக்கு இன்று முதல் 4ஆவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கமைய முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் கொரோனா தொடர்பான நிபுணர் குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே, இன்றைய தினம் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி Read More

Read more

கொரோனாத் தொற்றின் தாக்கம் தொடர்பாக WHO வெளியிடட முக்கிய அறிவிப்பு!!

கொரோனாத் தொற்றின் தாக்கம் குறைவடைந்து விட்டதாக கூறப்படுவது போலியான கருத்தாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.   உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போது பல்வேறு போலியான தகவல்கள் பரவி வருவதாகவும் ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Read more

எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என நீங்களே முடிவெடுக்க வேண்டாம்….. டொக்டர் ஹேமந்த ஹேரத்!!

48 மணித்தியாலங்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத்(Hemantha Herath) இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை சமூகத்தில் பரவுவதை அவதானித்த நிலையிலேயே மேற்கண்ட அறிவுறுத்தலை  விடுப்பதாக தெரிவித்தார். மக்கள் தாங்கள் எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ சிகிச்சையை பெறலாமா வேண்டாமா என்று Read More

Read more

நேற்றைய தினம் மட்டும் நாட்டில் 30 கொவிட் மரணங்கள்!!

இலங்கையில் மேலும் 30 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம்(14) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.   நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,874 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 304 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,3649 ஆக அதிகரித்துள்ளது.

Read more

நாடாளுமன்றத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாடாளுமன்றத்தில் சில பிரிவுகளின் மூன்று பிரதானிகள் உட்பட மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று நேற்று (14) உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை, 112 பணியாட் தொகுதியினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அதில் 28 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   கொரோனா தொற்றுக்குள்ளான 28 பேரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த சில வாரங்களில் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளான பணியாட் தொகுதியினரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இதுவரை 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா Read More

Read more

பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் உள்ள அனைத்து நாடுகளும் இன்று முதல் நீக்கம்!!

தற்போது சிவப்பு பட்டியலில் உள்ள அனைத்து நாடுகளையும் இன்று முதல் நீக்குவதாக பிரித்தானிய சுகாதார துறையின் செயலாளர் சஜிட் ஜாவிட் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் அச்சம் காரணமாக அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாவே உள்ளிட்ட 11 நாடுகள் கடந்த நவம்பர் மாதத்தில் சிவப்பு பட்டியல் இணைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், நாடாளுமன்றில் உரையாற்றிய சஜிட் ஜாவிட், குறித்த நாடுகளை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்குவதான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் உரையாற்றிய Read More

Read more

கொரோனாவின் அடுத்த அவதாரம்(A30)….. இது குறித்து உன்னிப்பான அவதானிப்பில் இலங்கையும் – ஹேமந்த ஹேரத்!!

உலகில் பல நாடுகள் A 30 கொரோனா வைரஸ் திரிபு குறித்து  கடும் அவதானத்துடன் இருந்து வருவதுடன் இலங்கையும் இது குறித்து உன்னிப்பான அவதானிப்பில் இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார். இந்த திரிபை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் என்ற வகையில் சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே கொரோனா வைரஸின் A 30 திரிபு சம்பந்தமாக இலங்கையும் அவதானத்துடன் இருந்து வருவதாக மருந்து Read More

Read more

இலங்கையின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய பிரித்தானியா!!

முழுமையான தடுப்பூசி சட்டத்தின் கீழ் இன்று (01) முதல் பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், Oxford/AstraZeneca, Pfizer BioNTech, Moderna, Janssen ஆகிய தடுப்பூசி வகைகள் பிரித்தானியாவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதனை தவிர, AstraZeneca Covishield, AstraZeneca Vaxzevria மற்றும் Moderna Takeda தடுப்பூசிகளும் பிரித்தானியாவினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. முழுமையான தடுப்பூசி சட்டத்தின் கீழ், சுற்றுலா பயணிகள் பிரித்தானியாவிற்கு வருகை தருவதாயின், குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர் முழுமையாக Read More

Read more

வவுனியாவில் பிரபல பாடசாலையிலும் கொரோனா தொற்று!!

நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்த தொடர் முடக்கநிலை நீக்கப்பட்டு, ஆரம்பபிரிவு மாணவர்களிற்கான பாடசாலை கல்விச்செயற்பாடுகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. வவுனியா மகாகச்சக்கொடி பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் தரம் 5இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து ஏனைய மாணவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வவுனியா மகாகச்சக்கொடி பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மாணவனின் வகுப்பறையில் இருந்த ஏனைய Read More

Read more