எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என நீங்களே முடிவெடுக்க வேண்டாம்….. டொக்டர் ஹேமந்த ஹேரத்!!

48 மணித்தியாலங்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத்(Hemantha Herath) இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை சமூகத்தில் பரவுவதை அவதானித்த நிலையிலேயே மேற்கண்ட அறிவுறுத்தலை  விடுப்பதாக தெரிவித்தார். மக்கள் தாங்கள் எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ சிகிச்சையை பெறலாமா வேண்டாமா என்று Read More

Read more

தடுப்பூசி அட்டைகள் தொடர்பில் MOH விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

இலங்கையர்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை தவிர்க்க போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தடுப்பூசி போடுவதைத் தவிர்ப்பது ஒரு பயனற்ற முயற்சி என மருத்துவர் அன்வர் ஹம்தானி (Anwar Hamdani) தெரிவித்துள்ளார். “தடுப்பூசி போடுவது ஒரு சமூகப் பொறுப்பாகும், எனவே அனைவரும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும்,” என அவர் கூறினார். மேலும், தடுப்பூசி போடப்பட்ட அனைவரின் தகவல்களும் சுகாதார அமைச்சகத்திடம் உள்ளன என்று தெரிவித்தார். அதேவேளை, இலங்கையில், Read More

Read more

ஊரடங்கு தொடர்பில் சற்றுமுன் வெளிவந்த தகவல்!!

நாட்டை முடக்காமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்தால் அது நமது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.   கொரோனா தடுப்பூசி அட்டையை சட்டபூர்வமாக்குவது தொடர்பில் பணியாற்றி வருகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், மரபணு பரிசோதனையானது, வைரஸின் புதிய திரிபுகளை அடையாளம் காண்பதற்கு Read More

Read more

‘ஒமிக்ரோன்’ தொற்று ஏற்படுவதை தாமதிக்க மாத்திரமே முடியும்….. ஹேமந்த ஹேரத்!!

இலங்கையில் “ஒமிக்ரோன்” பரவல் ஏற்படுவதை தாமதிக்க மாத்திரமே முடியும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார். இந்த புதிய தொற்று எந்த நேரத்திலும் நாட்டுக்குள் பிரவேசிக்க ஏதுக்கள் உள்ளன. இந்தநிலையில், நாட்டுக்குள் இந்த தொற்று வருவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், தம்மால் தொற்று ஏற்படுவதை தாமதிக்க மாத்திரமே முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

கட்டுப்பாடுகளை கடுமையாக்க நேரிடும்!!

பண்டிகை காலப்பகுதியில் கோவிட் வைரஸ் தொற்று பரவும் வகையில் மக்கள் செயற்பட்டால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நேரிடும் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போதைய காலப்பகுதியில் உள்ள சுகாதார வழிக்காட்டல்கள் இதற்கு முன்னர் காணப்பட்டதனை விடவும் தளர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில், சிறு குழந்தை முதல் அனைவருக்கும் சமூக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பண்டிகை காலத்துடன் தொடர்புடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Read more

கொரோனாவின் அடுத்த அவதாரம்(A30)….. இது குறித்து உன்னிப்பான அவதானிப்பில் இலங்கையும் – ஹேமந்த ஹேரத்!!

உலகில் பல நாடுகள் A 30 கொரோனா வைரஸ் திரிபு குறித்து  கடும் அவதானத்துடன் இருந்து வருவதுடன் இலங்கையும் இது குறித்து உன்னிப்பான அவதானிப்பில் இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார். இந்த திரிபை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் என்ற வகையில் சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே கொரோனா வைரஸின் A 30 திரிபு சம்பந்தமாக இலங்கையும் அவதானத்துடன் இருந்து வருவதாக மருந்து Read More

Read more

அஸ்ட்ராசெனெகா போதுமான அளவு உள்ளது – வைத்தியர் விளக்கம்!!

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற அனைவருக்கும் இரண்டாவது டோஸை வழங்க போதுமான அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். தடுப்பூசியை நிர்வகிப்பதற்காக நிறுவப்பட்ட தடுப்பூசி மையங்கள் பற்றிய தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட சுகாதார மருத்துவ அலுவலர் (MOH) துறைகளை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். இந்தியாவில் ஏற்பட்ட உள்ளூர் தேவையின் நிமிர்த்தம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆகையால் இலங்கையில் அத்தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு Read More

Read more

லம்ப்டா வைரஸ் திரிபு இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

லம்ப்டா கொரோனா வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். லம்ப்டா வைரஸ் திரிபு தொடர்பில் சுகாதார அமைச்சு மிகுந்த அவதானத்துடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வைரஸ் திரிபிற்கான மாதிரிகளை தொடர்ந்தும் பரிசோதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லம்ப்டா கொரோனா Read More

Read more

இலங்கையில் டெல்டா பரவக்கூடிய அபாயம் – ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!!

உலக நாடுகளில் தற்போது பாரிய அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ள டெல்டா மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்று இலங்கையில் மேலும் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதா இல்லையா என்கிற தீர்மானம் அடுத்தவாரத்தில் எடுக்கப்படலாம் என்று சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இலங்கையில் டெல்டா மாறுபாடான கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 05 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலயைில் தொற்று மேலும் பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது. Read More

Read more

நாட்டில் மீண்டும் பயணத்தடை அமுல்??

டெல்டா திரிபு வைரஸ் இலங்கையில் மேலும் தீவிரமடையக் சூடிய ஆபத்து உள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார். இந்நிலையில் பயணத்தடை விதிப்பது தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more