இலங்கையில் மீண்டும் கொடிய நோய்….. சுகாதார மேம்பாட்டுப் பணியகமிடமிருந்து அவசர எச்சரிக்கை!!

மலேரியா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறியப்பட்டாலும் நாட்டில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கல்முனைப் பிரதேசங்களில் மலேரியா நோய்க்கிருமியான Anopheles stephensi அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் ஜீவனி ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று(29/06/2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்து வெளியிட்டார்.

Read more

சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் “இன்புளுவென்ஸா” மற்றும் “கொரோனா”….. மிக்க கவனமாக இருக்க வேண்டுகோள்!!

இலங்கையில் தற்போதைய காலத்தில் டெங்கு இன்புளுவென்ஸா மற்றும் கொரோனா முதலான தொற்று நோய்கள் சிறுவர்களுடையே வேகமாக பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா ஊடகங்களிடம் தெரிவித்தார். தற்சமயம் இலங்கையில் கொரோனாத் தொற்று சமூகத்தில் உள்ளது. அதனை வைத்திய பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால் சில நேரம் இன்புளுவென்சா அல்லது கொரோனாத் தொற்றாக இருக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார். இலங்கையில் Read More

Read more

எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என நீங்களே முடிவெடுக்க வேண்டாம்….. டொக்டர் ஹேமந்த ஹேரத்!!

48 மணித்தியாலங்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத்(Hemantha Herath) இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை சமூகத்தில் பரவுவதை அவதானித்த நிலையிலேயே மேற்கண்ட அறிவுறுத்தலை  விடுப்பதாக தெரிவித்தார். மக்கள் தாங்கள் எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ சிகிச்சையை பெறலாமா வேண்டாமா என்று Read More

Read more

நீண்ட நாட்களின் பின்னர் பலியெடுத்த டெங்கு….. யாழில் 11 வயது மாணவன் பரிதாபகரமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவன் ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த, 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் காய்ச்சலால் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 (2022) ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் Read More

Read more

யாழ் மாவட்டம் அபாய வலயமாகியுள்ளது…..அரசாங்க அதிபர் க.மகேசன்!!

டெங்கு காய்ச்சலுக்ககான புள்ளி விபரத்தின் படி யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் (K.Makesan) தெரிவித்தார்.   நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,   “யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சமகாலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகின்றது.   எனவே, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், ஏனையோருடன் இணைந்து Read More

Read more

யாழில மீண்டும் பேராபத்து!!

இலங்கை முழுவதும் மீண்டும் மலேரியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர (Prasad Ranaweera) தெரிவித்துள்ளார். இலங்கையில் கடைசியாக மலேரியா நோயாளர் ஒருவர் 2012 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டார். 2016ஆம் ஆண்டு மலேரியாவை ஒழித்த நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

Read more

கொரோனாவை தொடர்ந்தும் வேகமாக பரவும் மற்றுமொரு நோய் -10 மாவட்டங்கள் ஆபத்தான பகுதிகளாக அறிவிப்பு!!

நாட்டில் டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், 10 மாவட்டங்கள் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் 16,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக நிபுணர் டொக்டர் ஹிமாலி ஹேரத் தெரிவித்தார். பதிவான ஒவ்வொரு 10 டெங்கு நோயாளிகளில் 7 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இந்த ஆண்டு இதுவரை 7 பேர் டெங்கு Read More

Read more

அபாய பகுதிக்குள் கொண்டுவரப்பட்ட மாவட்டங்கள் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 15,161 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவற்றில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 4,509 உறுதிப்படுத்தப்பட்ட டெங்கு நோயாளர்களும், கம்பாஹா மாவட்டத்தில் 1,905 உறுதிப்படுத்தப்பட்ட டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிக ஆபத்துள்ள சுகாதார பிரிவுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இதற்காக சுகாதார வைத்திய அதிகாரி பணிமானையின் கீழ் சிறப்புக் குழுக்கள் நிறத்தப்பட்டுள்ளதாகவும் Read More

Read more