பி.ஏ.1, பி.ஏ.2 மற்றும் பி.ஏ.3 திரிபுகள் தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளில் ஒமிக்ரோன் வைரசின் புதிய மாறுபாடு வகையான பி.ஏ.2 வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் அது வேகமாக பரவும் தன்மை கொண்டது என பிரான்ஸ் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஒமிக்ரோன் வகை கொரோனா வைரசின் துணை திரிபுகள், பி.ஏ.1, பி.ஏ.2 மற்றும் பி.ஏ.3 என உலக சுகாதார அமைப்பு வரிசைப்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரிட்டனில் 426 பேருக்கு பி.ஏ.2 வகை ஒமிக்ரோன் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், டென்மார்க், நோர்வே, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் அவ்வகை மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பவானிக்கு ஒட்டிக்கொண்ட பீடை!!

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம், மூன்றாவது இடத்தை பிடித்து ரசிகர்கள் கொண்டாடி வருபவர் தான் பாவனி. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தாலும், பிக்பாஸ் அல்டிமேட் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிப்பரப்பாகும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும், போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து வரும் நிலையில் பாவனி, தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார். அதில், “என்னுடைய நலம் விரும்பிகள் அனைவருக்கும்… நான் லேசான அறிகுறிகளுடன் Read More

Read more

டெல்டாவை முந்திக்கொண்டு வேகமாக பரவும் ஒமைக்ரோன்!

டெல்டாவை முந்திக்கொண்டு ஒமைக்ரோன் திரிபு வேகமாக பரவும் நிலை காணப்படுவதாக சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஒவ்வாமை, மூலக்கூற்று நுண்ணுயிர் பிரிவின் தலைவரான கலாநிதி சந்திம ஜீவந்தர (Chandima Jeevanthara) தெரிவித்துள்ளார். இதனால் இலங்கையின் முக்கிய வைரஸாக ஒமைக்ரோன் வைரஸை தற்போது குறிப்பிடமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை 208 ஒமைக்ரோன் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமைக்ரோன் வைரஸ் தொற்றுநோயாளர்களில் பெரும்பாலானோர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக வந்திருந்தவர்கள் Read More

Read more

அடுத்தவாரம் முதல் மாணவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி

16 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண (Prof. Channa Jayasumana) தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் செயற்பாடு வெற்றி பெற்றுள்ளது. சில நாட்களில் மூன்று மாதங்கள் முடிந்த பிறகு 16 Read More

Read more

கொரோனா மரணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் நேற்றைய தினம் 14 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் நான்கு பேர் ஆண்கள் எனவும் 10 பேர் பெண்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,211 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் நாட்டில் 7 கொவிட் மரணங்கள் பதிவாகி இருந்த நிலையில் நேற்றைய தினம் இது இரட்டிப்பாகி உள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,049 Read More

Read more

இன்று முதல் வழமைக்கு திரும்பும் கல்வி நடவடிக்கைகள்

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள், சில கட்டுப்பாடுகளுடன் மீள திறக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதேவேளை பாடசாலைகளிலுள்ள சிற்றுண்டிசாலைகளை திறப்பதற்கு சுகாதார அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை. அதனால் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் வெளியிலிருந்து உணவை எடுத்து செல்ல வேண்டும் என Read More

Read more

இலங்கையில் மேலும் 7 கொவிட் மரணங்கள் பதிவு

இலங்கையில் மேலும் 7 கொவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக சகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,119 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 141 பேர் குணமடைந்துள்ளதாக இன்று(09) வெளியிடப்பட்டுள்ள, நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 567,077 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

Read more

தடுப்பூசி செலுத்தியதை உறுத்திப்படுத்தும் அப்ளிகேஷன் இந்த மாத இறுதியில் அனைவரது மொபைல்களுக்கும்!!

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் விபரங்களை உள்ளடக்கிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்று (APP) உருவாக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர்  அசேல குணவர்தன (asela gunawardena) தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டமையை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் இலத்திரனியல் அடையாள அட்டை ஒன்றை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கண்டியில் நேற்று  (07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கையடக்கத் தொலைபேசி செயலி ஊடாக இலத்திரனியல் அடையாள Read More

Read more

173 கொரோனா நோயாளிகளுடன் இத்தாலியிலிருந்து வந்த விமானம்!!

இத்தாலி நாட்டிலிருந்து பஞ்சாபுக்கு ஒரே விமானத்தில் வந்த 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் மேலதிக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து அவர்களுக்கு ஒமிக்ரோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவரும். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Read more

கடந்த வாரத்தில் 71% அதிகரிப்பு – அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர்….. WHO!!

ஒமிக்ரான் திரிபு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்று விவரிப்பதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக நாடுகளில் ஒமிக்ரான் திரிபு மக்களை கொன்று வருகிறது எனவும் கூறியுள்ளது. கொரோனாவின் முந்தைய திரிபுகளை காட்டிலும் குறைந்த அளவிலேயே ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிரமான உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், ஒமிக்ரான் திரிபு பரவும் வேகத்தால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுகாதார அமைப்புகள் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக Read More

Read more