#Health

LatestNewsTOP STORIES

5 உயிர் காக்கும் மருந்துகள் உட்பட் 180 அத்தியாவசிய மருந்துகள் இல்லை….. அரசு அதிகாரபூர்வமாக மருத்துவ நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டும்!!

தெற்காசிய பிராந்தியத்தில் வலுவான பொது சுகாதார கட்டமைப்பைக் கொண்ட நாடாக இருந்த இலங்கை தற்போது மிக மோசமான சுகாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால், அரசாங்கம் அதிகாரபூர்வமாக மருத்துவ நெருக்கடி நிலையை அறிவித்து வெளிநாடுகளின் உதவியை பெறவேண்டுமென இலங்கையில் உள்ள மருத்துவ தொழிற்சங்கங்கள் அவசர கோரிக்கையை விடுத்துள்ளன. இலங்கையில் நாடளாவிய ரீதியில் உள்ள அரச மருத்துவமனைகளில் 5 உயிர் காக்கும் மருந்துகள் உட்பட் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மிகப்பெரிய அவல நிலை மருத்துவமனைகளில் நோயாளர்கள் மரணமடையும் Read More

Read More
LatestNewsTOP STORIES

எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என நீங்களே முடிவெடுக்க வேண்டாம்….. டொக்டர் ஹேமந்த ஹேரத்!!

48 மணித்தியாலங்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத்(Hemantha Herath) இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை சமூகத்தில் பரவுவதை அவதானித்த நிலையிலேயே மேற்கண்ட அறிவுறுத்தலை  விடுப்பதாக தெரிவித்தார். மக்கள் தாங்கள் எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ சிகிச்சையை பெறலாமா வேண்டாமா என்று Read More

Read More
LatestNews

மேலும் பல சுகாதார நடைமுறைகள் தொடர்பில் வெளியானது சுகாதார வழிகாட்டி!!

நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி மேலும் சில துறையினரின் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கும் நோக்கில் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார வழிகாட்டியும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய உள்ளக இசைநிகழ்ச்சிகளை மண்டப கொள்ளளவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடத்த புதிய சுகாதார வழிகாட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மிருக Read More

Read More
LatestNews

“கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்” – விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை

தடுப்பூசி முன்னுரிமை பட்டிலுக்கு ஏற்றவாறு தமது வேலைகளை செய்ய விடாது சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுமாயின் கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் (PHIU) எச்சரித்துள்ளனர். அரசியல்வாதிகள் செல்வாக்கு மிக்க அதிகாரிகள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தமது அதிகாரத்தை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் கொழும்பு மாநகரசபைக்குள் பதிவாகி உள்ளது என PHIU தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார். மக்கள் பிரதிநிதிகளாகக் கருதப்படும் அரசியல்வாதிகளிடமிருந்து இதுபோன்ற நடத்தைகளை நாங்கள் Read More

Read More