இராணுவத் தளபதி மற்றும் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள முக்கிய செய்தி!!

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். தேவையற்ற விதத்தில் அதிகமான ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். அதேவேளை பிரதேச செயலாளர் அலுவலகங்களின் அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். சில வர்த்தக நிலையங்களை Read More

Read more

யாழ் குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையிலேயே காணப்படுவதால் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவின்படி 139 நபர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை கிடைத்த பி சி ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனையில் 19 பேருக்கு Read More

Read more

வறிய நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை வழங்கும் G7 நாடுகள்!!!!

வறிய நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க G7 நாடுகள் இணங்கியுள்ளன. பிரிட்டன் சார்பில் முதல் 50 இலட்சம் தடுப்பூசிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக வழங்கப்படும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் G7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பருவநிலை மாற்றம், பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்று, புவிசார் அரசியல் குறித்து விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக பெருந்தொற்று காலத்தில், பணக்கார நாடுகளான G7 நாடுகள், உலகின் பிற நாடுகளுக்கு தடுப்பூசியை நன்கொடையாக வழங்குவது Read More

Read more

இதோ வெளிவருகிறது புதிய விசேட வர்த்தமானி!!

அரிசி, பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களை தொகையாக மறைத்து வைத்திருப்பதை தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என வரத்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு எதிர்கொண்டு அசாதாரண நிலைமையில் மக்களுக்கு சாதாரண விலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. அதற்காக அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்பவர்களும் நுகர்வோரும் பாதிக்காதவகையில் சாதாரண விலையில் பொருட்களை விற்பனை செய்யவும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். Read More

Read more

பயணத் தடை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது!!

நாட்டில் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே பயணத் தடை தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும் என கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா வைரஸ் மரணங்களும் அதிகரித்துள்ளன. நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையைக் கவனத்திற்கொண்டே பயணத் தடையை தொடர்வது பற்றி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க Read More

Read more

பயணக் கட்டுப்பாடு 14 ஆம் திகதி நீக்கப்படும்: இராணுவத் தளபதி!!!!

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். 14 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படும் தகவல் பொய்யானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – காரணம் கண்டுபிடிப்பு!!

இலங்கையில் அண்மைய சில நாட்களாக கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. எனவே கொவிட் உயிரிழப்புக்கள் அதிகளவில் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என கருதக்கூடிய விடயங்களை சுகாதார அமைச்சின் நிபுணர் குழு அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறிப்பாக கொவிட் தொற்றாளர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்வதில் ஏற்படும் தாமதம் மற்றும் நோயாளர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெறுவதற்கு காணப்படுகின்ற சந்தர்ப்பங்கள் போதுமானதாக Read More

Read more

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்! விசேட மருத்துவ நிபுணர் தகவல்!!

எதிர்வரும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களுக்குள் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேன இதனை கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நிலைமையை நெருங்க வேண்டுமாயின் இலங்கை மக்கள் தொகையில் 60 வீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். இதற்காக உலகில் தடுப்பூசிகளை தயாரிக்கும் நான்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை Read More

Read more

கொரோனாவின் உச்சத் தாண்டவம்! இந்தியாவை விட மோசமடையும் இலங்கை – 5000 தொற்றார்கள் மாயம்!!!!

கொரோனாவின் உச்ச தாண்டவம்! இந்தியாவை விட மோசமடையும் இலங்கை – 5 ஆயிரம் தொற்றார்கள் மாயம் கொரோனா தொற்று இந்தியாவை விட மோசமான கட்டத்தை இலங்கை அடைந்துள்ளது என புள்ளி விபரங்களுடன் அம்பலப்படுத்துகின்றது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம். தொற்று நோய் ஏற்படப்டு சிகிச்சை பெற்றுவந்த 5 ஆயிரம் தொற்றாளர்களின் நிலை என்ன எனவும் அரசாங்கத்திடம் கேள்வி எமுப்பியுள்ளனர்.

Read more

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு வெளியானது முக்கிய அறிவிப்பு !!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்று 14 நாட்களை கடந்திருந்தாலும், விமான நிலைய பிசிஆர் பரிசோதனை முடிவு வெளியாகும் வரை தனிமைப்படுத்தலில் ஈடுபடுவது அவசியம் என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும், இதனாலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சின், தனிமைப்படுத்தல் பிரிவின், விசேட சமுக வைத்திய நிபுணர் டில்ஹானி சமரசேகர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் Read More

Read more