கொரோனாத் தொற்றின் தாக்கம் தொடர்பாக WHO வெளியிடட முக்கிய அறிவிப்பு!!

கொரோனாத் தொற்றின் தாக்கம் குறைவடைந்து விட்டதாக கூறப்படுவது போலியான கருத்தாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.   உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போது பல்வேறு போலியான தகவல்கள் பரவி வருவதாகவும் ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Read more

நாளை முதல் ஆரம்பமாகிறது அனைத்து தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள்!!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் நாளை (22) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அலகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார். தற்போது தரம் ஒன்று முதல் 5 வரையிலான தரங்களும், 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்தன. இந்த Read More

Read more

எதிர்வரும் 30 வரை விதிக்கப்பட்ட தடை….. கடுமையான எச்சரிக்கை!!

பொதுக் கூட்டங்கள், வெளிப்புற கூட்ட நிகழ்வுகளுக்கு நவம்பர் 30ஆம் திகதி வரையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீடுகளில் கூட 10 இற்கும் மேற்பட்ட வெளியாட்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டியினை சுகாதார அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. மேலும், இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் இந்த தடை நடைமுறையில் இருக்கும் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Read more

கடடாயமாக்கப்பட்ட்து “Covid-19 Vaccinated Record Card”!!

சுற்றுலா செல்வோர் கட்டாயம் தடுப்பூசி அட்டைகளை தம்வசம் வைத்திருக்க வேண்டுமென சிறிலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தளங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி அட்டைகளை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமான சுற்றுல மையங்களுக்கு செல்லும் போது பூரணமாக தடுப்பூசி ஏற்றப்பட்ட அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க (Dhammika Wijesinghe) தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுற்றுலா மையங்களில் தடுப்பூசி அட்டைகளை பரிசோதனையிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். Read More

Read more

அடுத்த இரண்டு வார காலப் பகுதியில் ஊரடங்கா!!

எதிர்வரும் இரண்டு வார காலப் பகுதியில் பொதுமக்களின் நடவடிக்கைகளுக்கு அமைய, மீண்டும் ஊரடங்கு சட்டம் விதிப்பதா? அல்லது பயணக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவதா? என தீர்மானிக்கப்படும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்ஜித் பட்டுவன்துடுவ (Ranjith Badduvanthuduwa) தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், பொதுமக்களின் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு தற்போதுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதா? இல்லையா? என்பது குறித்தும் கலந்துரையாடப்படும். மேலும், Read More

Read more

இலங்கையின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய பிரித்தானியா!!

முழுமையான தடுப்பூசி சட்டத்தின் கீழ் இன்று (01) முதல் பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், Oxford/AstraZeneca, Pfizer BioNTech, Moderna, Janssen ஆகிய தடுப்பூசி வகைகள் பிரித்தானியாவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதனை தவிர, AstraZeneca Covishield, AstraZeneca Vaxzevria மற்றும் Moderna Takeda தடுப்பூசிகளும் பிரித்தானியாவினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. முழுமையான தடுப்பூசி சட்டத்தின் கீழ், சுற்றுலா பயணிகள் பிரித்தானியாவிற்கு வருகை தருவதாயின், குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர் முழுமையாக Read More

Read more

மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது பெற்றோர்களின் அனுமதி கடடாயம்….. எல்.எம்.பி. தர்மசேன!!

நாடளாவிய ரீதியில் 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும்போது, பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல்.எம்.பி. தர்மசேன( L.M.P Tharmasena) தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், பெற்றோர்களின் அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது, அதனைப் பூர்த்தி செய்து, பெற்றோரின் கையொப்பம் பெறப்பட்டிருப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட Read More

Read more

பொது போக்குவரத்து சேவையை நிறுத்துங்கள்…. வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்!!

கொவிட் -19 தொற்றை கணிசமாக கட்டுப்படுத்தும் வரை பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படுவதை மேலும் ஒத்திவைக்க வேண்டும் என்று சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம்,விசேட (Dr. Hemantha Herath) தெரிவித்துள்ளார். பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது கொவிட் தொற்று மீண்டும் தலைதூக்க வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் நாங்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Read more

20 வயதுக்கு மேட்பட்டவர்கள் முன் எந்த தடுப்பூசி போட்டு இருந்தாலும், பூஸ்டர் டோஸாக அனைவருக்கும் ஃபைசர் தடுப்பூசி!!

இலங்கையில், மார்ச் மாதத்திற்குள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸாக ஃபைசர் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க தேவையான அளவு தடுப்பூசி இருப்பை சுகாதார அமைச்சகம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 20 வயதுக்கு மேட்பட்டவர்களுக்கு இதற்கு முன் எந்த தடுப்பூசி வழங்கப்பட்டு இருந்தாலும், அவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக ஃபைசர் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக சினோபார்ம் வழங்கப்படும் என்று தகவல்கள் வந்தன. ஆனால், சுகாதார நிபுணர்கள் இந்த தகவல்களை நிராகரித்தனர். சினோபார்ம் Read More

Read more

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிப்பு!!

தற்போது நடைமுறையிலுள்ள  மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை குறித்த தடையை நீடிக்குமாறு சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் விடுமுறை நாட்கள் இருப்பதால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து கண்டிப்பாக சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அரச அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Read more