#Britain

FEATUREDLatestNewsTOP STORIESWorld

விஞ்ஞானிகளுக்கான விசா நடைமுறைகள், செலவுகளை எளிதாக்க வேண்டும்….. ஐரோப்பிய ஒரிசோன் ஆராய்ச்சித் திட்ட பலன்களை இழக்க நேரிடும்….. பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை! !

விஞ்ஞானிகளுக்கான விசா நடைமுறைகள் மற்றும் செலவுகளை எளிதாக்க வேண்டும் என பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், குறித்த நடவடிக்கையை பிரித்தானியா மேற்கொள்ளவிட்டால் ஐரோப்பிய ஒரிசோன் ஆராய்ச்சி திட்டத்தின் முழுப் பலன்களையும் இழக்க நேரிடும் என அந்த ஒன்றியம் எச்சரித்துள்ளது. லண்டனுக்கான தனது உத்தியோகப்பூர்வ பணயத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய ஆராய்ச்சி ஆணையர் இலியானா இவனோவா இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார். ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்வதில் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக அவர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

பிரித்தானியாவில் முதல் முறையாக தேசிய அவசர நிலை அறிவிப்பு!!

பிரித்தானியாவில் எதிர்வரும் வாரம் வெப்பநிலை உயரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளமையினால் முதல் முறையாக தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் இங்கிலாந்துப் பிராந்தியத்தில் எதிர்வரும்  வாரம் 40 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரும் என்பதால் முதல் முறையாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டன், மென்செஸ்டர் மற்றும் யோர்க் பகுதிகளுக்கு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தொடருந்து பாதைகளில் வேகக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதுடன் சில பாடசாலைகள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

பிரித்தானியாவில் துணை மேயராக தெரிவுசெய்யப்பட்ட ‘இலங்கைத் தமிழ் பெண்’!!

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் வாண்ட்ஸ்வொர்த் கவுன்சிலின் துணை மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மனித உரிமைகள் ஆர்வலரான சர்மிளா வரதராஜ்(Sharmila Varadaraj) என்பவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ‘சர்மிளா வரதராஜ்’ அவர்களின் பதிவை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்…………… இவர், புளோரிடா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து மற்றும் சிலி ஆகிய நாடுகளில் நான்கு வெளிநாட்டுப் படிப்புகளை முடித்து, ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகத்தில் வாலடிக்டோரியன் (உயர்ந்த தரவரிசை மாணவி) பட்டம் பெற்றுள்ளார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு எதிராக செயற்படும் பிரித்தானிய தமிழர்கள் மன்றம் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

பிரித்தானியாவில் அடுத்துவரும் நாட்களில் இரத்த மழை எச்சரிக்கை!!

பிரித்தானியாவின் சில பகுதிகளில் அடுத்துவரும் நாட்களில் இரத்த (சிவப்பு) மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் மழை பெய்வதுடன், இடி மின்னலுடன் கன மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை தொடர்பில் நேற்றுவரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மக்களின் பயணத்துக்கு இடையூறு ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இரத்த மழை என்பது, பாலைவனத்தில் (சஹாரா) இருந்து அதிக அளவில் Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

“லஸ்ஸா காய்ச்சல்” என்ற புதிய வகை வைரஸ் தொற்று….. பச்சிளம் குழந்தை மரணம்!!

பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல் (Lassa Fever) என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் மூன்று பேருக்கு தொற்றியமை கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா வைரஸூம் லஸ்ஸா வைரஸூம் உறவு முறை தொடர்புடையவை என்பதால், இந்த தொற்றும் உயிரிழப்பும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளன. இந்த பச்சிளம் குழந்தை, கடந்த வாரம் Luton & Dunstable மருத்துவமனையில் உயிரிழந்தது. இந்த நோய் தொற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில் Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

பி.ஏ.1, பி.ஏ.2 மற்றும் பி.ஏ.3 திரிபுகள் தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளில் ஒமிக்ரோன் வைரசின் புதிய மாறுபாடு வகையான பி.ஏ.2 வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் அது வேகமாக பரவும் தன்மை கொண்டது என பிரான்ஸ் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஒமிக்ரோன் வகை கொரோனா வைரசின் துணை திரிபுகள், பி.ஏ.1, பி.ஏ.2 மற்றும் பி.ஏ.3 என உலக சுகாதார அமைப்பு வரிசைப்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரிட்டனில் 426 பேருக்கு பி.ஏ.2 வகை ஒமிக்ரோன் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், டென்மார்க், நோர்வே, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் அவ்வகை மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More

Read More
LatestNewsWorld

இலங்கையின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய பிரித்தானியா!!

முழுமையான தடுப்பூசி சட்டத்தின் கீழ் இன்று (01) முதல் பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், Oxford/AstraZeneca, Pfizer BioNTech, Moderna, Janssen ஆகிய தடுப்பூசி வகைகள் பிரித்தானியாவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதனை தவிர, AstraZeneca Covishield, AstraZeneca Vaxzevria மற்றும் Moderna Takeda தடுப்பூசிகளும் பிரித்தானியாவினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. முழுமையான தடுப்பூசி சட்டத்தின் கீழ், சுற்றுலா பயணிகள் பிரித்தானியாவிற்கு வருகை தருவதாயின், குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர் முழுமையாக Read More

Read More
LatestNewsWorld

ஐரோப்பிய நாடுகளில் முன் எப்போதும் இல்லாதளவில் ஏட்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு!!

பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் எரிவாயு துறையில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்வரும் கோடைகாலத்தில் குளிரை அல்லது அதிகமான எரிவாயுக்கான மின் கட்டணத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரித்தானியாவின் எரிசக்தி கைத்தொழிற்துறையானது குறிப்பிடத்தக்க அளவில் நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்ளும் என துறைசார்ந்த தரப்பினர் எச்சரித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருகையில், ஐரோப்பிய பிராந்தியத்தில் மொத்த எரிவாயு விலையானது என்றுமில்லாத வகையில் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக Read More

Read More