தாய்லாந்திலிருந்து 10 வீத கட்டண கழிவில் எரிவாயு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி….. ஆனாலும் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்கிறார் லிட்ரோ நிறுவன தலைவர்!!

தாய்லாந்திலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டிற்கு எரிவாயுவை வழங்குவதற்கு தாய்லாந்தின் சியம்(Siam) எரிவாயு நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர், பொறியியலாளர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். விநியோகக் கட்டணத்தில் 10 வீத குறைந்த கட்டணத்துடன் எரிவாயுவை வழங்கவும் குறித்த நிறுவனம் இணங்கியுள்ளது. எவ்வாறாயினும், சமையல் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

Read more

அத்தியாவசிய சேவைகளுக்கும் மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும்….. லிட்ரோ எரிவாயு நிறுவனம்!!

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீளும் வரை நகரங்களுக்கும், அத்தியாவசிய சேவைகளுக்கும் மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, இந்த முடிவால் தினசரி எரிவாயு விநியோகம் 60,000 முதல் 80,000 சிலிண்டர்களில் இருந்து 30,000 சிலிண்டர்கள் வரை குறைக்கப்படும் என்றும் 27 சதவீத எரிவாயு நுகர்வோர் மட்டுமே எரிவாயுவைப் பயன்படுத்துவர் என்றும் அவர் கூறினார். நாட்டின் மாதாந்த எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மாதமொன்றுக்கு 30 மில்லியன் Read More

Read more

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

தற்போது கையிருப்பில் உள்ள எரிவாயுத் தொகையை உணவகங்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவை வழங்குனர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், உள்நாட்டு எரிவாயுக் கொள்கலன் விநியோகம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 3,600 மெற்றிக் தொன் உள்நாட்டு எரிவாயு ஏற்றி வரும் கப்பல் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 3,600 மெற்றிக் தொன் உள்நாட்டு எரிவாயுவுடன் மேலும் Read More

Read more

வாடிக்கையாளர்களுக்கு லிற்றோ நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

வெளிப்புற பிரச்சினைகளே சந்தை விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக லங்கா லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நாணயக் கடிதங்களை திறப்பது இப்போது எளிதானது. ஆனால், அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இன்னும் சில சவால்கள் உள்ளன என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொள்வனவு கட்டளைகள் வருவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும் நாட்டின் நிலையற்ற நிலை காரணமாக அடுத்த சில மாதங்கள் எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை, 5 நாட்களுக்கு பொது விடுமுறைக்காக தமது விநியோகத்தை Read More

Read more

போராட்ட குழுவால் வீதியில் கடும் வாகன நெரிசல்!!

பொரளை – பேஸ்லைன் வீதியை மறித்து குறித்த குழு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக, குறித்த வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.   லாஃப் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொடுக்குமாறு கோரி குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.   நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.   எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயுகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, உணவுப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய Read More

Read more

மூன்று தின விநியோகத்திற்கு போதுமான எரிவாயு மாத்திரமே இருப்பில்!!

டொலர்களை வழங்கிய பின்னர் நேற்று 3 ஆயிரத்து 500 மெற்றி தொன் சமையல் எரிவாயும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகை சுமார் மூன்று தினங்களுக்கு மாத்திரமே போதுமானது என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. லிட்ரோ எரிவாயு நிறுவனம் சுமார் 200 மெற்றி தொன் எரிவாயுவை தொழிற்சாலைகளுக்கு வழங்குகிறது. மீதமுள்ள எரிவாயு 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.5 கிலோ கிராம் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. ஒரு தொன் எரிவாயு மூலம் 12.5 கிலோ கிராம் Read More

Read more

லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க (Desara Jayasinghe) அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் 1311 என்ற இலக்கத்துக்கு அழைப்பதன் மூலம் இந்த காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அனைத்து லிட்ரோ எரிவாயு பாவனையாளர்களுக்கும் 1 மில்லியன் ரூபாய் வரையான காப்புறுதியை பெற்றுக்கொள்ள முடியும். இந்த காப்புறுதி திட்டத்தின் மூலம் இதுவரையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையானவர்களே விண்ணப்பித்துப் பயன்பெற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   Read More

Read more

மீளத் திருப்பி அனுப்பப்பட்டது எரிவாயு ஏற்றி வந்த கப்பல்!!

எரிவாயு ஏற்றி வந்த கப்பலொன்று மீளத் திருப்பி அனுப்பப்பட்டமையாலே  எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செயலாளர் டெரன்ஸ் அப்புஹாமி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போது நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் இரண்டு வாரங்களின் பின்னர் நிவர்த்தியாகும் என லிட்ரோ பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று விநியோகிக்கப்பட்ட எரிவாயு சில பகுதிகளுக்கு போதுமான அளவு கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read more

வெடித்துச் சிதறி முற்றாக பற்றி எரிந்த வீடு!!

புத்தளம் – கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட குரக்கான்சேனையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில் சிறிய சில்லறைக் கடையுடன் கொண்ட வீடொன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில்  இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்து வரும் தாய் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தனது பேரப்பிள்ளைக்கு Read More

Read more

சில விசேட தகன பயன்பாட்டுக்காக மட்டும் எரிவாயுவை பயன்படுத்த அனுமதி!!

தொழில் சார்ந்த மற்றும் உடல் தகன பயன்பாட்டுக்காக எரிவாயுவை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. லிட்ரோ (Litro) மற்றும் லாஃப்ஸ் (Laughs) எரிவாயு நிறுவனங்களுக்கே இந்த அனுமயினை நுகர்வோர் விவகார ஆணைக்குழு வழங்கியுள்ளது. எனினும், வீட்டுப் பாவனைக்காக சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் சடுதியாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சந்தையில் எரிவாயு விநியோகம் சீராக்கம் செய்யப்பட்டது. மேலும் Read More

Read more