செயலிழந்த மைக்ரோசொப்ட் சேவைகள்….. பயனர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

உலகின் மிக பிரபலமான மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்ட் இன் சேவைகள் தற்போது முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Outlook, MS Teams, Azure மற்றும் Microsoft 365 போன்ற மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகளே முடங்கியுள்ளது. குறித்த சேவைகளின் செயலிழப்பு தொடர்பாக பல பயனாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சேவை முடக்கம் காரணமாக மைக்ரோசொப்ட் அவுட்லுக்(Outlook) மூலம் மின்னஞ்சலை பரிமாற்றுபவர்கள் பாரிய சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இணையத்தில் ஏற்பட்டுள்ள குறித்த விடயத்தை தாங்கள் கண்டுபிடித்து விட்டதாகவும், அதனை சரி Read More

Read more

புயலில் சிக்கிய கடற்படை போர்க்கப்பல்….. 6 பேர் உயிரிழப்பு – 23 பேர் மாயம்!!

தாய்லாந்து நாட்டின் போர்க்கப்பல் புயலில் சிக்கி விபத்திற்குள்ளானதில் 6 பேர் பலியாகியுள்ளனர். தாய்லாந்து வளைகுடா பகுதியில் போர்க்கப்பல் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக புயலில் சிக்கியுள்ளது. இதனால் கப்பலுக்குள் நீர் புகுந்து HTMS Sukhothai என்ற அந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர், 3 போர்க்கப்பல்கள், இரண்டு உலங்குவானூர்திகள் என்பன இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டன. குறித்த கப்பலில் மொத்தம் 106 மாலுமிகள் பயணித்த நிலையில், 75 Read More

Read more

இடியுடன் கூடிய கன மழை….. நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை!!

தென் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, ஊவா Read More

Read more

மன்னாரில் புகையிரதம் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை!!

கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி சென்ற புகையிரதத்தின் முன் குடும்பஸ்தர் ஒருவர் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் உயிலங்குளம் காவல்துறை பிரிவில் மாதோட்டம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் நேற்றுமுன்தினம் (19) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரிழந்தவர் மணற்குளம் தண்ணீர் தாங்கி கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி நகுலேஸ்வரன் (வயது-37) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் Read More

Read more

க.பொ.த சாதாரண தர ‘கணிதத்தில் சித்தியடையாதோருக்கு’ ம் வாய்ப்பு….. வெளியானது முக்கிய அறிவிப்பு!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், குறைந்தபட்சம் ஐந்து சித்திகளைப் பெற்றவர்கள், கணித பாடத்தில் சித்தியடையாத போதிலும் உயர்தர வகுப்புகளில் சேர முடியும் என பரீட்சை ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின்படி, ஐந்து சித்திகளைப் பெற்ற மற்றும் கணிதத்தில் சித்தியடையாத மாணவர் கூட உயர்தர கற்கைகளை தொடரமுடியும் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றிய மாணவர்களில் Read More

Read more

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு மக்களுக்கு ‘லிட்ரோ நிறுவனம்’ விடுத்துள்ள அறிவிப்பு!!

நாடளாவிய ரீதியில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்த்திருப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் இன்று முதல் ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே பண்டிகைக் காலங்களில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், சந்தைக்கு எரிவாயு விநியோகிப்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவும் அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். Read More

Read more

பந்தயத்தால் நடந்த விபரீதம் – பரிதாபமாக உயிரிழந்த 18 வயது இளைஞர்கள்

பண்டாரகம – மொரன்துடுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் உந்துருளி பந்தயம் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த விபத்தில் 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.    

Read more

யாழில் 15 வயதில் தாயாகிய சிறுமி – பின்னணியில் 18 வயது இளைஞன்

கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தாயாகியுள்ளார். பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வழங்கிய தகவலிலையே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரால் கோப்பாய் காவல்துறையினரிடம் முறையிட்டதையடுத்து விசாரணைகள் நடாத்தப்பட்டன. விசாரணையில் 18 வயதுடைய இளைஞர் ஒருவருடன் குறித்த சிறுமி குடும்பமாக வாழ்ந்து வருகின்றமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   Read More

Read more

வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!!

இலங்கையிலுள்ள வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கியுடன் கலந்துரையாடி நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஷெஹான் சேமசிங்க தலைமையில் நடைபெற்ற நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் மத்திய வங்கியின் Read More

Read more