மீண்டும் அதிகரிக்கிறது எரிவாயு விலை!!

விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் ஒக்டோபர் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தத்தில் எரிவாயுவின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடந்த விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

Read more

இலங்கையை எச்சரிக்கிறது உலக வங்கி….. உலக வங்கியின் பொரிஸ் ஹடாட் சர்வோஸ்தெரிவிப்பு!!

பொருளாதார நெருக்கடி நிலைமையானது தொடர்ந்து உக்கிரமடைந்தால் மக்கள் அதிகளவில் நாட்டை விட்டுச் செல்வார்கள் என உலக வங்கியின் இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான பணிப்பாளர் பொரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(20/07/2023) கொழும்பில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறிய அவர் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மிகவும் கவலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கும் குடும்பங்கள் தமது Read More

Read more

கோரவிபத்தில் சிக்கி சிதறுண்டது அம்புலன்ஸ்

பண்டாரவளை பதுளை வீதியின் தோவ பிரதேசத்தில் அம்புலன்ஸ் வண்டியும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலன்ஸ் சாரதி படுகாயமடைந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். டிப்பர் ரக வாகனம் மோதியதில் அம்புலன்ஸ் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் அதில் இரு நோயாளிகள் இருந்ததாகவும், எனினும் நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். அம்புலன்ஸில் இருந்த உதவி சாரதி மற்றும் உதவியாளரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர். தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு Read More

Read more

வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!!

வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து பல காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக தேசிய பொருளாதார மற்றும் பௌதிக திட்டங்கள் தொடர்பான துறை சார் மேற்பார்வை குழுவின் சமீபத்திய கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது, பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பல காரணிகளை கருத்தில்கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன எனவும், அந்நிய செலவாணி நெருக்கடி காரணமாக சுமார் 4000 பொருள்களை Read More

Read more

சென்னை – காங்கேசன்துறை கப்பல் சேவை – முதற்கட்டமாக யாழ்ப்பாணம் வரவுள்ள கப்பல்

எதிர்வரும் 17 ஆம் திகதி சென்னையில் இருந்து கப்பலொன்று காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையவுள்ளது. குறித்த கப்பலை வரவேற்பதற்காக துறைமுகங்கள் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதற்கட்ட பரீட்சார்த்தமாகவே குறித்த கப்பல் சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை காங்கேசன்துறை துறைமுகம் நாளை மறுதினம் கப்பல் துறை அமைச்சர் Read More

Read more

ஏ-9 வீதியில் கோர விபத்து..!

ஏ 9 வீதியில் மன்னகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 7 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வான் மன்னகுளம் பகுதியில் முன்னால் பயணித்த கனரக வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று (04) நள்ளிரவு 12 மணி அளவில் கனகராயன் குளத்திற்கும், மாங்குளத்திற்கும் இடையில் 212 வது கிலோமீற்றர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தை அடுத்து கனரக வாகனம் அங்கிருந்து Read More

Read more

உலகளவில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இலங்கைக்கு துணைத்தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளும் ஏகமனதாக இந்த தெரிவினை மேற்கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி மொஹான் பீரிஸ் இந்தப் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார். எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2024ம் ஆண்டு செப்டம்பர் வரையில் ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தின் சார்பில் இந்த பதவியை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிவியா, கொங்கோ, எஸ்டோனியா, காம்பியா, ஐஸ்லாந்து, ஈரான், மலேசியா, Read More

Read more

அரச வங்கியில் பாரிய தங்க நகை கொள்ளை….. சிக்கிய வங்கி ஊழியர்கள்!!

மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள அரச வங்கியின் பெட்டகத்திலிருந்து சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை திருடிய குற்றச்சாட்டின் பேரில் வங்கி ஊழியர்கள் மூவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அவர்களில் துணை முகாமையாளர், செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் சேவை உதவியாளர் ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவுக்கு அண்மையில் முறைப்பாடு கிடைத்திருந்தது. அதன்படி, வங்கிக்கு Read More

Read more

தளர்த்தப்படும் இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தல்!!

அடுத்த வாரத்தில் இருந்து பல பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. 300 முதல் 400 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மார்ச் 2020 முதல் அதன் நீடித்த கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக அரசாங்கம் பல பொருட்களுக்கு தடை விதித்தது. பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதி மீதான தடை கடந்த Read More

Read more

யாழ் மாவட்ட காவல்துறையினரின் விசேட ரோந்து நடவடிக்கை….. கோரிக்கை விடுத்த அமைச்சர்!!

வார இறுதி நாட்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகாமையில் காவல்துறையினரின் நடமாட்டத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம் பெறும் இடங்களுக்கு அண்மையில் காவல்துறையினரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துமாறு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நேற்றையதினம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதோடு குறித்த விடையத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதாக யாழ் மாவட்ட Read More

Read more