#Private Bus Owners Association

FEATUREDLatestNewsTOP STORIES

600 ரூபா விலையில் தாரளமாக டீசல் கிடைக்கின்றது….. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!!

ஒரு லீற்றர் டீசல் வெளியில் 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த விலையில் தாரளமாக டீசல் உள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே பேருந்துகளை இயக்க முடியும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். முறையாக டீசல் வழங்கப்படாவிட்டால் நாடு முழுவதும் பேருந்து சேவைகள் முற்றிலுமாக தடைப்படும் என்றார். இலங்கை போக்குவரத்து சபையின் களஞ்சியசாலை எரிபொருள் வழங்கிய போதிலும் அதுவும் தற்போது வழங்கப்படுவதில்லை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

திங்கட்கிழமை முதல் எந்தவொரு தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடாது….. தலைவர் கெமுனு விஜேரத்ன!!

பேருந்துகளுக்கு முறையான டீசல் கிடைக்காததால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் (06/06/2022) அனைத்து தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், டீசல் பெறுவதற்கு பேருந்துகள் பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ எரிபொருள் வழங்குவதாக கூறப்பட்டாலும், அதற்கான முறையான வேலைத்திட்டம் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நள்ளிரவிலிருந்து அதிகரிக்கப்பட்டது பஸ் கட்டணம்!!

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் 19.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது. பேருந்து கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாகும்….. தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்!!

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ‘கெமுனு விஜேரத்ன’ அமைச்சர்களை மாற்றுவதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் குறிப்பிட்டார்.

Read More
LatestNewsTOP STORIES

நாளை மறுதினம் முதல் தனியார் பேருந்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும்….. தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்!!

தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) நாளை பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டணத்தை திருத்துவது அல்லது டீசல் மானியம் வழங்குவது குறித்து கலந்துரையாடப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை 20 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டால், தற்போதுள்ள கட்டணத்தையே தொடர்ந்தும் பேணுவதற்கு பேருந்து உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், எரிபொருள் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளதால் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். ஆகவே Read More

Read More
LatestNewsTOP STORIES

திங்கட்கிழமை(28/02/2022) முதல் 50 சதவீதமாகக் குறைத்து சேவை முன்னெடுக்கப்படும்….. கெமுனு விஜேரட்ண!!

எரிபொருள் பிரச்சினை காரணமாக பேருந்து சேவைகளை 50 சதவீதத்தினால் குறைக்கவேண்டி ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ண (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார். எரிபொருள் இல்லாவிட்டால், பெரும்பாலும் திங்கட்கிழமை முதல் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்படும். எனினும், பேருந்து பயணங்களை 50 சதவீதமாகக் குறைத்து சேவை முன்னெடுக்கப்படும். இந்த நிலையில், சலுகைகளை வழங்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read More
LatestNews

தரம் குறைந்த பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி, இதனால் எமது வாகனங்கள் பழுதடைகின்றன….. கெமுனு விஜேரட்ன!!

அண்மைக் காலமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியன தரம் குறைந்தவை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். யூடியுப் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தரம் குறைந்த எரிபொருட்களை பயன்படுத்துவதனால் தங்களது வாகனங்கள் பழுதடைவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தரம் குறைந்த பெற்றோல், டீசல் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுவதாக தாம் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த Read More

Read More