நள்ளிரவிலிருந்து அதிகரிக்கப்பட்டது பஸ் கட்டணம்!!
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் 19.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.
பேருந்து கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.