தர்மபுரம் பொலீஸ் பிரிவில் இன்று ஒரு வெடிப்பு சம்பவம்!!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு – மயில்வாகனபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தர்மபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சமையல் செய்து கொண்டிருக்கும் போது பலத்த சத்தத்துடன் அடுப்பு வெடித்ததால் உடனடியாக வீட்டிலிருந்து வெளியில் ஒடி வந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

Read more

வெடித்துச் சிதறி முற்றாக பற்றி எரிந்த வீடு!!

புத்தளம் – கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட குரக்கான்சேனையில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில் சிறிய சில்லறைக் கடையுடன் கொண்ட வீடொன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில்  இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்து வரும் தாய் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தனது பேரப்பிள்ளைக்கு Read More

Read more

எரிவாயு கசிவு காரணமாக பாரிய தீ விபத்து….. 3000 கோழிகள் பலி!!

பன்னல பல்லேகமவில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 3000 கோழி குஞ்சுகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

Laughfs Gas நிறுவனத்தின் விநியோகம் இன்று ஆரம்பம்!!

இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பரிந்துரைகளுக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக Laughfs Gas நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் எரிவாயு உரிய பரிந்துரைகளுக்கு அமைய விநியோகிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகள் தொடர்ச்சியாக வெடித்து வருவதால் மக்கள் தற்போது எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதை குறைத்து விறகை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெடிபபு!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சமையல் அறை மற்றும் தனியார் வீடொன்று உட்பட இன்று காஸ் அடுப்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட காஸ் அடுப்பு வெடித்துள்ளது. எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதேபோல் துன்னாலை வடக்கு அமிர்தலிங்கம் பவநந்தினி என்பவரின் வீட்டிலும் காஸ் அடுப்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இரு சம்பவங்களிலும் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

Cylinder வெடிப்பு விபத்தில் சிக்கிய பெண் இரு வாரங்களுக்குப் பின் மரணம்!!

சமையல் எரிவாயு விபத்து காரணமாக தீக்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மாத்தளை உடுபிஹில்ல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 19 ஆம் திகதி சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைக்க முயற்சித்த போது உடலில் தீப்பிடித்துள்ளது. கடும் தீக்காயங்களுக்கு உள்ளான பெண், மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு இரண்டு வாரங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இரண்டு தினங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பெண் Read More

Read more

முல்லைதீவில் சற்றுமுன் பதிவானது முதலாவது வெடிப்பு சம்பவம்!!

முல்லைத்தீவு மாவட்டத்திலும் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடொன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 11 மணியளவில் சமையல் செய்துகொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அருகில் யாரும் இல்லாததனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடளாவிய ரீதியில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகிய Read More

Read more

நல்லூர், அம்பாறை, புத்தளம் ஆகிய பகுதிகளில் இன்று இதுவரையில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!!

அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று மதிய உணவு தயாரித்துக்கொண்டிருந்த போது அடுப்பு எரிவதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று முன்னால் இருந்த வர்த்தக நிலையத்தினரை அழைத்துள்ளார். இதன்போது உடனடியாக ஓடிச் சென்ற வர்த்தக நிலையத்தினர் எரிவாயு சிலிண்டரை Read More

Read more

வெடித்துச் சிதறிய Gas அடுப்பு!!

மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் காஸ் அடுப்பு  வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தலவாக்கலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேநீர் தயாரிப்பதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்த பின்பு அதனை, நிறுத்திவிட்டு  வெளியில் சென்ற ஒரு நொடியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக Read More

Read more

தரம் குறைந்த பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி, இதனால் எமது வாகனங்கள் பழுதடைகின்றன….. கெமுனு விஜேரட்ன!!

அண்மைக் காலமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியன தரம் குறைந்தவை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். யூடியுப் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தரம் குறைந்த எரிபொருட்களை பயன்படுத்துவதனால் தங்களது வாகனங்கள் பழுதடைவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தரம் குறைந்த பெற்றோல், டீசல் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுவதாக தாம் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த Read More

Read more