நாளை முதல் புதிய பஸ் கட்டணங்கள்….. குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபா!!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து பேருந்து கட்டணங்களும் 22 சதவீதம் அதிகரிக்கப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தபட்சம் 30% கட்டண உயர்வை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபாயாக உயர்வு !!

நாளை (27/06/2022) முதல் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது. இதன்படி, 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் உயர்த்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் முமுடிவெடுத்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த கட்டண திருத்தம் என்பனவற்றை கருத்திற் கொண்டு பேருந்து கட்டணத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more

600 ரூபா விலையில் தாரளமாக டீசல் கிடைக்கின்றது….. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!!

ஒரு லீற்றர் டீசல் வெளியில் 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த விலையில் தாரளமாக டீசல் உள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே பேருந்துகளை இயக்க முடியும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். முறையாக டீசல் வழங்கப்படாவிட்டால் நாடு முழுவதும் பேருந்து சேவைகள் முற்றிலுமாக தடைப்படும் என்றார். இலங்கை போக்குவரத்து சபையின் களஞ்சியசாலை எரிபொருள் வழங்கிய போதிலும் அதுவும் தற்போது வழங்கப்படுவதில்லை Read More

Read more

மக்களுக்கு இ.போ.ச விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

அனைத்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளும் நாளை வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அனைத்து தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதன்படி, நாளைய தினம் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஆதலால், நாளை வழமை போன்று 5200 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் Read More

Read more

யாழ். காரைநகரில் பேருந்து விபத்து!!

யாழ். காரைநகர் பகுதியில் இன்று காலை பேருந்தொன்று விபத்திற்கு இலக்காகியதில் பலர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே கல்லுண்டாய் வீதியில் வைத்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.  விபத்தில் காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பேருந்து வேகமாக பயணித்துள்ள நிலையில் அப்பகுதியில் வைத்து வேகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இது தொடர்பான Read More

Read more