#bus fare hike

FEATUREDLatestNewsTOP STORIES

குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபாயாக உயர்வு !!

நாளை (27/06/2022) முதல் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது. இதன்படி, 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் உயர்த்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் முமுடிவெடுத்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த கட்டண திருத்தம் என்பனவற்றை கருத்திற் கொண்டு பேருந்து கட்டணத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நள்ளிரவிலிருந்து அதிகரிக்கப்பட்டது பஸ் கட்டணம்!!

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் 19.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது. பேருந்து கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாகும்….. தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்!!

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ‘கெமுனு விஜேரத்ன’ அமைச்சர்களை மாற்றுவதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் குறிப்பிட்டார்.

Read More
LatestNewsTOP VIDEOS

அடுத்து பாடசாலை போக்குவரத்துச் சேவைக் கட்டணமும் அதிகரிப்பு!!

பாடசாலை போக்குவரத்துச் சேவைக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக மாவட்ட பாடசாலை போக்குவரத்துச் சேவையின் தலைவர் ஹரிஸ்சந்திர பிரேமசிறி (Harischandra Premasiri) தெரிவித்துள்ளார்.   மேலும் தெரித்த அவர், பிரதான நகரங்களில் 80 கிலோமீற்றர் தூரத்திற்கான சேவைக்கு தற்போது அறவிடப்படும் மாதாந்த தொகைக்கு மேலதிகமாக 1,000 ரூபா அறவிடப்படும். அத்துடன், கிராமப் புறங்களில் 10 கிலோமீற்றர் தூரத்திற்கு 200 ரூபா தொடக்கம் 300 Read More

Read More
LatestNewsTOP STORIES

அதிகரிக்கப்பட்டது பேருந்து கட்டணம்….. முழுமையான விபரங்கள்!!

புதிய பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று வெளியிட்டுள்ளது இலங்கையில் தற்போது ஆகக்கூடிய பேருந்து கட்டணமாக 1,303 முதல் 1,498 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சடுதியாக ஏற்பட்ட எரிபொருளின் விலையேற்றம் காரணமாக பேருந்து கட்டணத்தினை அதிகரிக்குமாறு கோரியிருந்த நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

17.44 சதவீதத்தால் இன்று முதல் அதிகரிக்கப்படும் பஸ் கட்டணம்!!

இன்று (05) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளன. பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் கடந்த 29 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய பேருந்து பயணக் கட்டணங்கள் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டதுடன், இன்று முதல் புதிய கட்டண முறை நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டது. புதிய கட்டண அதிகரிப்பு தொடர்பிலான விசேட அறிவிப்பு அடங்கிய ஆவணங்கள், பயணிகள், பேருந்துகளின் உரிமையாளர்கள், பேருந்து ஊழியர்கள் என Read More

Read More
LatestNewsTOP STORIES

நாளை முதல் பேருந்து முற்கொடுப்பனவு அட்டைகள் அறிமுகம்….. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!!

பேருந்துகளுக்கான முற்கொடுப்பனவு அட்டைகளை நாளை முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, அதன் முதற்கட்ட செயற்திட்டம் தெஹிவளை முதல் பத்தரமுல்லை வரை சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது, குறித்த பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைகளுக்கு அமைய மாத்திரம் பயணிகள் அழைத்து செல்லப்படுவதுடன் பின்பக்க கதவு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்துக்குள் பிரவேசித்தல் மற்றும் வெளியேறுதல் முன்பக்க கதவிலே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நுழைவு பகுதியில் முற்கொடுப்பனவு அட்டைக்கான இயந்திரம் Read More

Read More