பாடசாலையில் பட்டினியால் மாணவர்கள் மயங்கி விழுவது அதிகரித்துள்ளது….. பாடசாலை அதிபர்கள் சங்கத்தின் தலைவர்!!

பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை தொழில் சார் பாடசாலை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலைகளை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட போஷாக்கு வேலைத்திட்டமும் தற்போது நின்று போயுள்ளதாக இலங்கை தொழில் சார் பாடசாலை அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுஜீவ விமலரத்ன தெரிவித்துள்ளார். புத்தகங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதுடன் காலணிகளின் விலைகளும்,பாடசாலை சீருடைகளின் விலைகளும் 200 வீதமாக அதிகரித்துள்ளது. அத்துடன் உணவுகளின் விலைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன. சில மாணவர்கள் காலையில் பாடசாலையில் நடக்கும் Read More

Read more

“பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்…..” – அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே!!

காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமென்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு பொது மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமென்றும் பெற்றோரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் வேலைக்கு செல்லவும் வேண்டாமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Read more

பாடசாலை சேவை வாகன கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்!!

பாடசாலை சேவைக் கட்டணத்தை அதிகரிப்பதற்க  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். வாகன உதிரிபாகங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமெனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் தமக்கான கட்டணத்தை அதிகரிக்கவில்லையென மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more

இலங்கையில் சிறுவர்களை குறி வைக்கும் மற்றுமொரு ஆபத்தான நோய் – பெற்றோர்களே அவதானம்!!

இலங்கையில் தற்போது பூனை மற்றும் நாய்கள் மூலம் சிறுவர்களுக்கு புதிய நோய் தொற்றுவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். டோக்ஸோகாரியாசிஸ் (toxocariasis) என அந்த நோய்க்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகளுடன் சிறுவர்கள் வீட்டில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். பெரும்பாலும் பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் போன்ற சிறிய விலங்குகளின் உடலில் இந்த நோய் உருவாகின்றது. இந்த விலங்குகளுடன் தொடர்பை Read More

Read more