#Van

LatestNews

கண்டி – திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து….. சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

இன்று (21) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, தம்பலகாமம் நோக்கிப் பயணித்த கனரக வாகனத்துடன் வான் ஒன்று மோதியதில், இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் தம்பலகாமம் சிராஜ் நகரைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான, எம்.எஸ்.எம்.கரீம் ( வயது – 56) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சாரதியின் அருகாமையில் இருந்தவரே உயிரிழந்த நிலையில், வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More

Read More
LatestNews

வடமாகாண A9 வீதிகளில் இனி வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை????

வடக்கு மாகாணத்தில் A9 பிரதான வீதியின் இருபுறமும் இரவிலும் பகலிலும் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டது. வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்காரவினால் (Senior DIG Jagath Palihakkara) இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) உதவியுடன் பொருத்தமான வாகனத் தரிப்பிடங்களை இனங்கண்டு, இது தொடர்பில் சாரதிகளுக்கு தெளிவுபடுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இப்பணியை முறையாக மேற்கொள்ள பொலிஸ் Read More

Read More
LatestNews

முடிவிற்கு வரும் வாகனதாரர்களுக்கு கொடுக்கப்படட கால அவகாசம்!!

நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் காலாவதியான போக்குவரத்து அபராத கட்டணங்களைச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 14ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தபால்மா அதிபர் அறிவித்துள்ளார். அதன்படி, ஒக்டோபர் 31ஆம் திததி தொடக்கம் போக்குவரத்து குற்றங்களுக்காக வழங்கப்படும் அபராத பற்றுச்சீட்டுக்கான மேலதிக அபராதக் கட்டணம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 28 நாட்கள் வரை மேலதிக அபராத கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Read More
LatestNews

பாடசாலை சேவை வாகன கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்!!

பாடசாலை சேவைக் கட்டணத்தை அதிகரிப்பதற்க  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். வாகன உதிரிபாகங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமெனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் தமக்கான கட்டணத்தை அதிகரிக்கவில்லையென மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More
LatestNews

வாகனம் வாங்க காத்திருப்போருக்குகான தகவல்!!

இலங்கையில் கடந்த வருடம் முதல் வாகனம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் வாகனங்களின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக விலையில் வாகனங்களை விற்பனை செய்வதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் மீண்டும் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கிய பின்னர் லீசிங் நிறுவனங்கள் பாரிய வீழ்ச்சியடைந்து பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாவனையில் உள்ள வாகனங்களை பாவிப்பது , வாகனங்களின் நிலையை வைத்து Read More

Read More