சாதாரண மற்றும் உயர்தர கல்வி செயற்பாட்டிற்காக பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் புதிய செய்தி!!

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் ங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். 10,11,12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு கொவிட்-19 தடுப்பு செயலணி பரிந்துரைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, 6 – 9 ஆம் தரங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது, பரீட்சை நடவடிக்கைகளை முன்னெடுப்பது உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு Read More

Read more

97% அதிபர்களும், 89% ஆசிரியர்களும், 45% மாணவர்களும் வருகை…… பேராசிரியர் கபில பெரேரா!!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1-5 வரை நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டதையடுத்து 97% அதிபர்களும் 89% ஆசிரியர்களும் கடமைக்கு சமுகமளித்திருந்ததாகவும் மாணவர்களின் வருகை 45% ஆக இருந்ததாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (K.Kapila C.K.Perera) தெரிவித்தார். அதிபர் மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டணி தனது 106 நாள் வேலைநிறுத்தத்தை முடித்து நேற்று (25) பாடசாலைகளுக்கு சேவைகளுக்கு சமுகமளித்திருந்தனர். பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு படிப்படியாக அதிகரிக்குமென Read More

Read more

பாடசாலை சேவை வாகன கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்!!

பாடசாலை சேவைக் கட்டணத்தை அதிகரிப்பதற்க  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். வாகன உதிரிபாகங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமெனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் தமக்கான கட்டணத்தை அதிகரிக்கவில்லையென மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more

குறைந்தளவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை முதலில் ஆரம்பிப்பதற்கான இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது…. கல்வி அமைச்சு!!

இது தொடர்பில் கல்வி அமைச்சருக்கும் மாகாண சபை ஆளுநர்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 200இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும் 100 மாணவர்களை விடக் குறைவான பாடசாலைகளின் எல்லா வகுப்புகளையும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அளவுகோல்களின் கீழ் 3,000 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த பாடசாலைகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது தொடர்பாகவும், இந்த கலந்துரையாடலின் போது ஆளுநர்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

Read more

18 ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்…. ஊவா மாகாண ஆளுநர் ஏஜேஎம் முஸம்மில்!!

ஊவா மாகாணத்தில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளும் 18 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக ஆளுநர் ஏஜேஎம் முஸம்மில் தெரிவித்தார். அன்றையதினம் பாடசாலைகளை திறப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்து மாகாணக் கல்வி அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். இதேவேளை, மேல் மாகாணத்தில் திர்வரும் 15 ஆம் திகதி 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more