பாடசாலை சேவை வாகன கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்!!

பாடசாலை சேவைக் கட்டணத்தை அதிகரிப்பதற்க  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். வாகன உதிரிபாகங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமெனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் தமக்கான கட்டணத்தை அதிகரிக்கவில்லையென மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிப்பு!!

தற்போது நடைமுறையிலுள்ள  மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை குறித்த தடையை நீடிக்குமாறு சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் விடுமுறை நாட்கள் இருப்பதால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து கண்டிப்பாக சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அரச அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Read more

பல்கலைக்கழக மாணவர்களுக்கு Covid19 Virus தடுப்பூசிகள் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில்….. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!!

கொரோனா தொற்றை அடுத்து நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பன மூடப்பட்டுள்ளன. எனவே அவற்றின் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் தாம் வசிக்கும் பிரதேசங்களுக்கருகிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் Read More

Read more

வடமராட்சி கிழக்கில் மின்னல் தாக்கி இறந்தவருக்கும் Covid-19 தொற்று உறுதி!!

வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இச்சம்பவம் நேற்று முன்தினம் வெற்றிலைக்கேணி கோரியடி கடற்கரையில் உள்ள வாடியில் நின்றபோது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் போது , இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜோன் தோமசன் குயின்ரன் சுதர்சன் (வயது – 35) என்பவர் உயிரிழந்திருந்துள்ளார். அவருடைய சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போதே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read more

நாளை முதல் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி!!

பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இதன்படி 12 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையானது நாளை (24) ஆரம்பமாக உள்ளது. கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் தடுப்பூசி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மேலும் குருணாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் தடுப்பூசிகள் Read More

Read more

ஐரோப்பிய நாடுகளில் முன் எப்போதும் இல்லாதளவில் ஏட்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு!!

பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் எரிவாயு துறையில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்வரும் கோடைகாலத்தில் குளிரை அல்லது அதிகமான எரிவாயுக்கான மின் கட்டணத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரித்தானியாவின் எரிசக்தி கைத்தொழிற்துறையானது குறிப்பிடத்தக்க அளவில் நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்ளும் என துறைசார்ந்த தரப்பினர் எச்சரித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருகையில், ஐரோப்பிய பிராந்தியத்தில் மொத்த எரிவாயு விலையானது என்றுமில்லாத வகையில் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக Read More

Read more

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீள திறக்கலாம்….. சுகாதார அமைச்சு!!

தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளர்கள் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளமையினால், பாடசாலைகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாணவர்களின் கல்வித் தேவை மாத்திரமன்றி, அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அவசியமானது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆரம்ப வகுப்புக்களை சேர்ந்த மாணவர்கள் மன ரீதியில் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளமையினால், Read More

Read more