யாழ். காரைநகரில் பேருந்து விபத்து!!

யாழ். காரைநகர் பகுதியில் இன்று காலை பேருந்தொன்று விபத்திற்கு இலக்காகியதில் பலர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே கல்லுண்டாய் வீதியில் வைத்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.  விபத்தில் காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பேருந்து வேகமாக பயணித்துள்ள நிலையில் அப்பகுதியில் வைத்து வேகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இது தொடர்பான Read More

Read more

யாழ். காரைநகரில் கொரோனா தொற்றாளர்: மருத்துவமனை உட்ப பல இடங்கள் முடக்கப்பட்டன!

வலி.மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கானை மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சைக்கிள் கடை ஒன்றினைச் சேர்ந்த 6 பேரின் குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையும் 3 நாள்கள் மூடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் உட்பட 40 பேர் வரையில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் படி Read More

Read more