குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபாயாக உயர்வு !!

நாளை (27/06/2022) முதல் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது. இதன்படி, 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் உயர்த்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் முமுடிவெடுத்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த கட்டண திருத்தம் என்பனவற்றை கருத்திற் கொண்டு பேருந்து கட்டணத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more

இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளது….. புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள்!!

எதிர்வரும் தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பில் இலங்கையில் மீண்டும் விலை அதிகரிப்புகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களில் ஒன்று கோதுமை மா விநியோகத்தை நிறுத்தியுள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் தற்போதைய விலை 210 தொடக்கம் 220 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை கோதுமை மாவிற்கான Read More

Read more

500 ரூபாவால், 50 கிலோகிராம் சீமெந்தின் விலை அதிகரிப்பு!!

சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன, இந்த விலை உயர்வுக்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் 50 கிலோகிராம் சீமெந்து பொதிகளின் விலையை அதிகரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 2 ஆயிரத்து 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

திடீர் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ள தங்க விலை!!

உலக சந்தையில் தங்கம் விலை மேலும் உயர்வடைந்துள்ளது தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,858.68 அமெரிக்க டொலர்களாக உள்ளது. அதன்படி, கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 32 டொலர்களுக்கும் அதிகமான தொகையினால் அதிகரித்துள்ளது.

Read more

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!!!

இன்று (12/06/2021)  முதல் அமுலாகும் வகையில் CEYPETCO எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. இதன்படி, ஒக்டெய்ன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 20 ரூபாவாலும் ஒக்டெய்ன் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 23 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் 7 ரூபாவாலும், சுப்பர் டீசல் 12 ரூபாவாலும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 7 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read more