#Increase

FEATUREDLatestNewsTOP STORIES

குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபாயாக உயர்வு !!

நாளை (27/06/2022) முதல் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது. இதன்படி, 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் உயர்த்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் முமுடிவெடுத்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த கட்டண திருத்தம் என்பனவற்றை கருத்திற் கொண்டு பேருந்து கட்டணத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More
LatestNewsTOP STORIES

பருப்பின் விலை 1,000 ரூபா….. மேலும் அதிகரிக்கும் விலைவாசி!!

நாட்டில் கடந்த சில நாட்களாக விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், எதிர்வரும் மே மாதத்திற்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 1,000 ரூபாவாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதிலும், விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்படுகின்றமையால் மக்கள் தற்போது பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் தற்போது நாட்டில் ஒரு Read More

Read More
LatestNewsTOP STORIES

நள்ளிரவு முதல் பாரியளவில் அதிகரிக்கப்பட்டது எரிபொருள் விலைகள்!!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் மீண்டும் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளது.   லங்கா ஐ.ஓ.சி நிறுவனமே இந்த எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.   இதற்கமைய, சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. மேலும்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகள் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பு விபரம் வருமாறு, • பெட்ரோல் 92 – ரூ.338 • Read More

Read More
LatestNewsTOP STORIES

500 ரூபாவால், 50 கிலோகிராம் சீமெந்தின் விலை அதிகரிப்பு!!

சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன, இந்த விலை உயர்வுக்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் 50 கிலோகிராம் சீமெந்து பொதிகளின் விலையை அதிகரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 2 ஆயிரத்து 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNewsTOP STORIESWorld

திடீர் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ள தங்க விலை!!

உலக சந்தையில் தங்கம் விலை மேலும் உயர்வடைந்துள்ளது தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,858.68 அமெரிக்க டொலர்களாக உள்ளது. அதன்படி, கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 32 டொலர்களுக்கும் அதிகமான தொகையினால் அதிகரித்துள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

சந்தைகளில் சகல ரக அரிசிகளின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நாள் முதல் வர்த்தகர்கள் விரும்பியவாறு அரிசிகளின் விலைகளை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே ரஞ்சித் (P.K Ranjith) தெரிவித்துள்ளார். அதேவேளை வடக்கு, வடமத்திய மாகாணங்களிலிருந்து நெல் அறுவடை Read More

Read More
LatestNews

திகுடுத்தனம் புரிந்த வர்த்தகர்……. நுகர்வோர் அதிகார சபையினரின் அதிரடி நடவாட்க்கை!!

நுவரெலியாவில் கடையொன்றில் விலையை மாற்றி அதிக விலைக்கு சொக்லேட் விற்பனை செய்த வர்த்தகருக்கு எதிராக நுவரெலியா நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நேற்று (6) இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். கடையிலிருந்த சொக்லேட்டின் விலையை வர்த்தகர் அழித்துவிட்டு தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப பேனாவால் எழுதி வைத்து விற்பனை செய்வதாக நுவரெலியா நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. நுவரெலியா நுகர்வோர் அலுவல்கள் அத்தியட்சகர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ரங்க Read More

Read More
LatestNews

பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்….. கெமுணு விஜேரத்ன!!

எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன (Kemunu Wijeratne) கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி, ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணமாக 25 ரூபாவை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், ஆகக்குறைந்தது 20 வீதத்திலாவது பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்ஜன பிரியஞ்ஜித் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு Read More

Read More
LatestNews

திடீரென அதிகரித்தது முட்டையின் விலை!!

இலங்கையில் ஒரு முட்டையின் விலையானது 30 ரூபாயாக அதிகரித்துள்ளது. கால்நடைகளுக்கான உணவு  தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு போன்ற காரணத்தால் ஒரு முட்டையின் விலையானது 30 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களில் 840 ரூபாவாக அதிகரித்திருந்த கோழி இறைச்சியின் விலை தற்போது 650 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தையில் முட்டையின் விலையானது 30 ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNews

முக்கிய உணவுப்பொருட்கள் இரண்டு உட்பட, இன்று முதல் மேலும் அதிகரிக்கவுள்ள விலைவாசி!!

நாட்டில் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை மேலும் அதிகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கோதுமை மாவிற்கான தட்டுப்பாடு நிலவுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது  தெரிவித்தார். மேலும், கோதுமை மாவுக்கான விலையினை அதிகரிப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று  எடுக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவும் நிலையிலேயே குறித்த தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது. இதன் காரணமாகவே இன்று Read More

Read More