ஷங்கர் படத்தில் ஆலியா பட்?

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட், அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக Read More

Read more

கனவை நிறைவேற்ற முயற்சிக்கும் நாகார்ஜுனா

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நாகார்ஜுனா, தனது கனவை நிறைவேற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நாகார்ஜுனா தமிழில் ரட்சகன் படத்தில் நடித்துள்ளார். நாகார்ஜுனாவுக்கு ஐதராபாத்தில் ஸ்டூடியோ உள்ளது. அடுத்து சினிமா அருங்காட்சியகம் தொடங்க திட்டமிட்டு உள்ளார். இதுகுறித்து நாகார்ஜுனா கூறும்போது, “திரைப்படங்களை எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு செல்ல வேண்டும். எனவே தெலுங்கு சினிமாவுக்காக ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது. 2019-ல் திரைப்பட Read More

Read more

கொரோனாவால் தாமதமாகும் படப்பிடிப்பு…. ரிலீஸ் பிளானை மாற்றிய ‘தளபதி 65’ படக்குழு

கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தாமதமாவதால், ‘தளபதி 65’ படக்குழு ரிலீஸ் பிளானை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி Read More

Read more

நேரடியாக டி.வி.யில் வெளியாகும் கதிர் திரைப்படம்

பரியேறும் பெருமாள், பிகில் படத்தை தொடர்ந்து கதிர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியாக இருக்கிறது. பரியேறும் பெருமாள், பிகில் படத்தை தொடர்ந்து கதிர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சர்பத்’. 7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் – வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் ‘சர்பத்’ படத்தை பிரபாகரன் இயக்கி இருக்கிறார். இதில் கதிருடன் முதல் முறையாக சூரி இணைந்து நடித்திருக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். முக்கிய Read More

Read more

யானையுடன் அன்பாக பழகும் விஷ்ணு விஷால்… வைரலாகும் வீடியோ

காடன் படத்தில் யானைகளுடன் இணைந்து நடித்திருக்கும் விஷ்ணு விஷால், தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரபுசாலமன் இயக்கத்தில், ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காடன்’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படத்தில் யானைகள் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. சமீபத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷ்ணு விஷால், யானைகளை பார்த்து பயம் இல்லை. மனிதர்களைப் பார்த்துதான் பயம் என்று கூறினார். இந்நிலையில், Read More

Read more

‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் அப்டேட்

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அரண்மனை 3’ படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். அரண்மனை பேய் படம் இதுவரை 2 பாகங்கள் வந்துள்ளன. சுந்தர்.சி இயக்கிய இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக Read More

Read more

20 வருடத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் பிரபல நடிகர் ஒருவர் 20 வருடத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். நடிகர் சூர்யா தற்போது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். மேலும் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். Read More

Read more

ப்ரோ, நீங்க ஒரு ஹீரோ… கிரிக்கெட் வீரரை பாராட்டிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை பாராட்டி இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் சதம் அடித்து 106 ரன்களில் ஆட்டமிழந்த அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளத்தில் அஸ்வினை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது Read More

Read more

தெலுங்கிலும் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்சேதுபதி தெலுங்கிலும் மாஸ் காட்ட ஆரம்பித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தெலுங்கில் உப்பெனா என்னும் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த வாரம் வெளியானது. புஜ்ஜி பாபுவின் இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நடித்திருந்த இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பத்திரிகையாளர்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் வெளியான மூன்று நாட்களிலேயே Read More

Read more

அமீர் கான் படத்தில் நடிக்காதது ஏன்? – மனம் திறந்த விஜய் சேதுபதி

அமீர் கானின் ‘லால் சிங் சட்டா’ படத்தில் நடிக்காததற்கான உண்மை காரணத்தை நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’. இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ‘லால் சிங் சட்டா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அமீர் கான் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். மேலும் இதில் அமீர் கானின் நண்பராக நடிக்க ஒப்பந்தமான விஜய் சேதுபதி, சமீபத்தில் அப்படத்தில் இருந்து விலகினார். Read More

Read more