செயலிழந்த மைக்ரோசொப்ட் சேவைகள்….. பயனர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!!

உலகின் மிக பிரபலமான மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்ட் இன் சேவைகள் தற்போது முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Outlook, MS Teams, Azure மற்றும் Microsoft 365 போன்ற மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகளே முடங்கியுள்ளது. குறித்த சேவைகளின் செயலிழப்பு தொடர்பாக பல பயனாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சேவை முடக்கம் காரணமாக மைக்ரோசொப்ட் அவுட்லுக்(Outlook) மூலம் மின்னஞ்சலை பரிமாற்றுபவர்கள் பாரிய சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இணையத்தில் ஏற்பட்டுள்ள குறித்த விடயத்தை தாங்கள் கண்டுபிடித்து விட்டதாகவும், அதனை சரி Read More

Read more

புயலில் சிக்கிய கடற்படை போர்க்கப்பல்….. 6 பேர் உயிரிழப்பு – 23 பேர் மாயம்!!

தாய்லாந்து நாட்டின் போர்க்கப்பல் புயலில் சிக்கி விபத்திற்குள்ளானதில் 6 பேர் பலியாகியுள்ளனர். தாய்லாந்து வளைகுடா பகுதியில் போர்க்கப்பல் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக புயலில் சிக்கியுள்ளது. இதனால் கப்பலுக்குள் நீர் புகுந்து HTMS Sukhothai என்ற அந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர், 3 போர்க்கப்பல்கள், இரண்டு உலங்குவானூர்திகள் என்பன இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டன. குறித்த கப்பலில் மொத்தம் 106 மாலுமிகள் பயணித்த நிலையில், 75 Read More

Read more

மன்னாரில் புகையிரதம் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை!!

கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி சென்ற புகையிரதத்தின் முன் குடும்பஸ்தர் ஒருவர் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் உயிலங்குளம் காவல்துறை பிரிவில் மாதோட்டம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் நேற்றுமுன்தினம் (19) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரிழந்தவர் மணற்குளம் தண்ணீர் தாங்கி கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி நகுலேஸ்வரன் (வயது-37) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் Read More

Read more

சூட்சுமமான முறையில் யாழில் போதை மாத்திரை விற்பனை….. கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்!!

மின்சாதங்கள் விற்பனை செய்பவர்கள் போல் பாசாங்கு காட்டி போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ். கல்வியன்காடு ஞானபாஸ்கரோதயா விளையாட்டரங்கு வீதியில் வைத்து நேற்று மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 30 வயதுடையவர்கள் என்றும் ஒருவர் சுன்னாகம் பகுதியை சேர்ந்தவர் என்றும் மற்றைய நபர் கல்வியன்காடு விளையாட்டரங்கு வீதியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் Read More

Read more

நடிகை “மும்தாஜ்” வீட்டில் வேலை செய்த சிறுமிகளுக்கு துன்புறுத்தல்…. போலீசார் அதிரடி நடவடிக்கை!!

தமிழ் சினிமாவில் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ். அதன்பின்னர், குஷி, ஸ்டார், ரோஜாக்கூட்டம், ராஜாதி ராஜா என பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு ரீ எண்ட்ரி கொடுத்து புகழ்பெற்றார். இந்நிலையில், நடிகை மும்தாஜ் சென்னை அண்ணாநகர் எச்.பிளாக் பகுதியில் உள்ள வீட்டில் சினிமா நடிகை மும்தாஜ் வசித்து வருகிறார். இவரின் வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்தீன் Read More

Read more

நாட்டின் தற்போதைய துயரமான நிலை குறித்து எமது பசங்க FM வானொலி மூலம் வெளியிடப்பட்ட பாடல்!!

இலங்கையில் தற்போது கடந்த சில மாதங்களாக அசாதாரணமான சூழ்நிலைகள் நிலவி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், ‘இலங்கை நாடானது மக்கள் வாழ தகுதியற்ற நாடாக மாறி வருகின்றது’, அடுத்த சோமாலியா இலங்கை தான்’ என பலரும் பல கோணங்களில் தமது ஆவேசங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில், இலங்கையின் இளைய தலைமுறையாக திகழ்ந்து வரும் எமது தமிழ் இளைஞர்களின் வானொலியாக திகழ்ந்து வரும் பசங்க FM வானொலி ஆனது இலங்கை மக்கள் சார்பாக தமது ஆக்கத்திறன் Read More

Read more

”தினமும் 4 மணிநேர மின் வெட்டு” மக்களை தயாராக இருக்குமாறு அறிவுறுத்து…

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர் நிலைகளில் நீர் குறைவடைந்துள்ளமை ஆகிய காரணங்களினால், மின் வெட்டை எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமியா குமாரவடு (Saumya Kumarawadu) எதிர்வு கூறியுள்ளார். நாளொன்றில் 4 மணிநேர மின்வெட்டை எதிர்கொள்ள தயாராகுமாறு, பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து  வெளியிடுகையில், சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான 3000 மெற்றிக் தொன் டீசல் மாத்திரமே இலங்கை மின்சார சபை வசம் காணப்படுகின்றது. Read More

Read more

இலங்கைக்கு பெருந்தொகை நிதியை கொடுத்தது இந்தியா!

இலங்கைக்கு இந்திய அரசாங்கம் பெருந்தொகை நிதியை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா, இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது. இதில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றம் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிய கிளியரிங் யூனியன் செட்டில்மென்ட் கட்டமைப்பின் கீழ் செலுத்த திட்டமிடப்பட்ட மற்றொரு 500 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.    

Read more

திருகோணமலையில் சிறுவர்களை பலியெடுத்த படகு விபத்து சந்தேக நபர்களுக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் திருகோணமலை நீதிவான் நீதிமன்றினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைதான மிதப்பு பால உரிமையாளர் உள்ளிட்டோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபர் கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம், கடந்த 10 ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது Read More

Read more