சிங்கிள் ஷாட் சண்டைக் காட்சி….. சிம்பு படத்தின் புதிய தகவல்!!

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ‘வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்’ சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, மாநாடு படத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட சண்டைக் கட்சி போன்று வெந்து தணிந்தது காடு படத்திலும் ஐந்து நிமிட சண்டைக் காட்சி ஒன்று சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காட்சி மாநாடு படத்தைப் போன்றே நல்ல வரவேற்பைப் பெறும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *