யாழில் தீயினால் இரு குடும்பப் பெண்கள் மரணம்!!

யாழ்பாணத்தில் இருவேறு சம்பவங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு குடும்ப பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மருதங்கேணி உடுத்துறை பகுதியை சேர்ந்த பிரபாகரன் பிறேமலதா (வயது 43) என்பவர் கடந்த 08ஆம் திகதி தீ காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியர் யாழ்ப்பாணம் சென். சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பித்து வந்த நிலையில், சுகவீனம் காரணமாக ஆசிரிய பணியில் இருந்து Read More

Read more

யாழ்.பீச் ஹோட்டலில் இளைஞர் ஒருவர் போத்தலொன்றினால் குத்தி கொலை(காணொளி) !!

யாழ். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இளைஞர் ஒருவர் போத்தலொன்றினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான திக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், Read More

Read more

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வெடிபபு!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சமையல் அறை மற்றும் தனியார் வீடொன்று உட்பட இன்று காஸ் அடுப்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட காஸ் அடுப்பு வெடித்துள்ளது. எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதேபோல் துன்னாலை வடக்கு அமிர்தலிங்கம் பவநந்தினி என்பவரின் வீட்டிலும் காஸ் அடுப்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இரு சம்பவங்களிலும் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில்…. குவிந்துள்ள கொரோனா சடலங்கள் – வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதனின் கருத்து!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போதே அவ்வாறு இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , எமது வைத்திய சாலையில் கடந்த மே மாதம் 17ஆம் திகதி கொரோனா நோயாளர் விடுதி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 556 Read More

Read more