விருந்தகங்கள், உணவகங்கள் வைத்திருப்போருக்காக புதிய சட்டம்….. எச்சரிக்கை அவசியம்!!

விருந்தகங்கள் மற்றும் உணவகங்களில் பணியாற்றும் உணவு தயாரிப்பாளர்களுக்கு பயிற்சியின் பின்னர் சான்றிதழ் வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார். தற்போது, உணவகங்கள் மற்றும் விருந்தகங்கள் பாவனைக்குத் தகுதியற்ற உணவைத் தயாரிக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு பணிபுரியும் நபர்களின் தூய்மை குறித்து ஆராய்வதற்காக சோதனை நடத்தப்பட்டு வருவதாக பணிப்பாளர் குறிப்பிட்டார். நாட்டின் பதினெட்டு வீதமான உணவகங்கள் மற்றும் விருந்தகங்களில் பொருத்தமற்ற உணவுகள் தயாரிக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நாட்டில்  Read More

Read more

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!!

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று (26/06/2022) முதல், சிறிய உணவுகள், கொத்து மற்றும் உணவுப் பொதிகளின் விலைகள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சில மணி நேரங்களின் பின்னர் மீண்டும் இந்த விலையேற்றம் இடம்பெற்றுள்ளது.

Read more

யாழ்.பீச் ஹோட்டலில் இளைஞர் ஒருவர் போத்தலொன்றினால் குத்தி கொலை(காணொளி) !!

யாழ். நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இளைஞர் ஒருவர் போத்தலொன்றினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான திக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், Read More

Read more

உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம்….. அசேல சம்பத்!!

இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டமையினால் உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் (Asela Sampath) தெரிவித்துள்ளார். உணவகத்தில் உணவுகள் சமைப்பதற்கு கட்டாயம் எரிவாயு அவசியம் எனவும் உணவகங்களில் எரிவாயு அடுப்புகள் மாத்திரமே உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், எரிவாயு கலவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட சிலிண்டர்களின் விநியோகத்தை மாத்திரம் நிறுத்துமாறு லிட்ரோ நிறுவனத்திடம் கேட்டுக்கொள்கின்றோம். இல்லை என்றால் இன்று முதல் Read More

Read more