அரியாலையில் பெண்னொருவர் ஹெரோயினுடன் கைது!!

யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியில் பெண் ஒருவர் நேற்று பெருமளவு ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் வேளை பெண்ணிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

இதன் உள்ளூர் பெறுமதி 5 தொடக்கம் 6 இலட்சம் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் கைது செய்யப்பட்ட பெண் 33 வயதுடைய அரியாலை பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பெண் கொழும்பில் இருந்து யாழிற்கு பேருந்து மூலம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திவந்து,

யாழில் உள்ளூர் தரகர்கள் மூலம் பல நாட்களாக விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குறித்த பெண் தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிற்கு விடயங்கள் கசியத்தொடங்கியதை அடுத்து பெண்ணை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதேவேளை,

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் தரகர்கள் தொடர்பிலும் கொழும்பு முகவர்கள் தொர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *