ஹெரோயின் உள்ளெடுத்த பூசகர் மரணம்….. நல்லூர் பகுதியில் சம்பவம்!!

ஹெரோயின்(Heroin) போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளம் கோவில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ் – நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கோவில் பூசகரே நேற்று(08/06/2023) உயிரிழந்துள்ளார். நேற்று(08/06/2023) மாலை ஆலய பூஜை முடித்துவிட்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.

Read more

அரியாலையில் பெண்னொருவர் ஹெரோயினுடன் கைது!!

யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியில் பெண் ஒருவர் நேற்று பெருமளவு ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் வேளை பெண்ணிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. இதன் உள்ளூர் பெறுமதி 5 தொடக்கம் 6 இலட்சம் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் கைது செய்யப்பட்ட பெண் 33 வயதுடைய அரியாலை பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த பெண் கொழும்பில் இருந்து யாழிற்கு பேருந்து மூலம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திவந்து, Read More

Read more

அடுத்து சிக்கிய 250 கிலோ கிராம் ஹெரோயின்!!

பேருவளையை அண்மித்த கடற்பரப்பில் சுமார் 250 கோடி ரூபா பெறுமதியான 250 கிலோகிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பணியகத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, கடற்படையினரின் உதவியுடன் இன்று அதிகாலை அதிரடி சுற்றிவளைப்பை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். இதன்போதே,  குறித்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த போதைப்பொருளை படகு ஒன்றில் கொண்டுவந்த 5 சந்தேகநபர்களும்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

தென்னிலங்கையில் சிக்கிய பெருமாளவான ஹெரோயின் போதைப்பொருள்!!

தென் மாகாணத்தை அண்மித்த கடற்பரப்பில், 290 கிலோகிராமிற்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருளுடன், 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுள்ளனர். படகொன்றில் கொண்டு சென்ற சந்தர்ப்பத்திலேயே, இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய, கடற்படையுடன் இணைந்து பொலிஸ் போதைப்பொருள் பிரிவு நடத்திய சுற்றி வளைப்பினை மேற்கொண்டுள்ளனர். இதன் போது குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 2321 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் Read More

Read more