சூட்சுமமான முறையில் யாழில் போதை மாத்திரை விற்பனை….. கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்!!

மின்சாதங்கள் விற்பனை செய்பவர்கள் போல் பாசாங்கு காட்டி போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ். கல்வியன்காடு ஞானபாஸ்கரோதயா விளையாட்டரங்கு வீதியில் வைத்து நேற்று மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 30 வயதுடையவர்கள் என்றும் ஒருவர் சுன்னாகம் பகுதியை சேர்ந்தவர் என்றும் மற்றைய நபர் கல்வியன்காடு விளையாட்டரங்கு வீதியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் Read More

Read more

10 மில்லியன் பெறுமதியான “குஷ் கஞ்சா” வெளிநாடுகளில் இருந்து பொதிகளினுடாக நாட்டிற்குள்!!

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களுக்கு என அனுப்பி வைக்கப்பட்ட பொதிகளில் பாரியளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்படி, 10 மில்லியன் பெறுமதியான குஷ் கஞ்சா சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு கடமைகளின் போது, குறித்த பொதிகளில் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 13 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

Read more

அரியாலையில் பெண்னொருவர் ஹெரோயினுடன் கைது!!

யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியில் பெண் ஒருவர் நேற்று பெருமளவு ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் வேளை பெண்ணிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. இதன் உள்ளூர் பெறுமதி 5 தொடக்கம் 6 இலட்சம் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் கைது செய்யப்பட்ட பெண் 33 வயதுடைய அரியாலை பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த பெண் கொழும்பில் இருந்து யாழிற்கு பேருந்து மூலம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திவந்து, Read More

Read more

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க மருத்துவ சான்றிதழ் பெற வந்தவர்களில் கண்டுபிடிக்கப்படட அதிர்ச்சியான உண்மைகள்!!

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப்பிப்பதற்கும் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வந்த 1213 பேரில் 145 பேர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன(Ajith Rohana)  தெரிவித்தார். தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிக்கைகளினால் இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் அஜித் ரோஹன தெரிவித்தார். இவர்களில் பெரும்பாலானோர் லொறி சாரதிகள் எனவும் Read More

Read more