19KG கஞ்சாவை எலிகள் தின்று விட்டதாக நீதிமன்றத்தில் கூறிய காவல்துறை….. கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை!!

19 கிலோ கஞ்சாவை கொஞ்சம் கொஞ்சமாக எலிகள் தின்று விட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 30 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதில் தற்போது 11 கிலோ கஞ்சாவை மட்டுமே காவல்துறையினர் நீதிமன்றில் ஒப்படைத்தனர். இது குறித்து எழுத்துபூர்வமாக காவல்துறையினர் தெரிவித்தபோது பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சாவை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. பழுதடைந்த கட்டடம் Read More

Read more

10 மில்லியன் பெறுமதியான “குஷ் கஞ்சா” வெளிநாடுகளில் இருந்து பொதிகளினுடாக நாட்டிற்குள்!!

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களுக்கு என அனுப்பி வைக்கப்பட்ட பொதிகளில் பாரியளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்படி, 10 மில்லியன் பெறுமதியான குஷ் கஞ்சா சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு கடமைகளின் போது, குறித்த பொதிகளில் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 13 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

Read more

அரியாலையில் பெண்னொருவர் ஹெரோயினுடன் கைது!!

யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியில் பெண் ஒருவர் நேற்று பெருமளவு ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் வேளை பெண்ணிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. இதன் உள்ளூர் பெறுமதி 5 தொடக்கம் 6 இலட்சம் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் கைது செய்யப்பட்ட பெண் 33 வயதுடைய அரியாலை பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த பெண் கொழும்பில் இருந்து யாழிற்கு பேருந்து மூலம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திவந்து, Read More

Read more

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க மருத்துவ சான்றிதழ் பெற வந்தவர்களில் கண்டுபிடிக்கப்படட அதிர்ச்சியான உண்மைகள்!!

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப்பிப்பதற்கும் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வந்த 1213 பேரில் 145 பேர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன(Ajith Rohana)  தெரிவித்தார். தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிக்கைகளினால் இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் அஜித் ரோஹன தெரிவித்தார். இவர்களில் பெரும்பாலானோர் லொறி சாரதிகள் எனவும் Read More

Read more

விமான நிலைய சோதனையின் போது 17 கொக்கேய்ன் உருண்டைகளை விழுங்கிய கென்ய பிரஜை!!

டுபாய் நாட்டில் இருந்து இலங்கை வந்த கென்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், டுபாய் நாட்டில் இருந்து இலங்கை வந்த கென்ய பிரஜை  போதைப் பொருளை உடமையில் வைத்துள்ளார் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனை நடவடிக்கையின் போது, 17 கொக்கேய்ன் போதைப் பொருள் உருண்டைகளை விழுங்கிய நிலையில், சந்தேக நபரை பரிசோதித்த பின்னர் Read More

Read more

2.2 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் , 120 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது!!

யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு கடத்த முற்பட்ட 2 கிலோ 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஐஸின் (பளிங்கு மெதம்பேட்டமின்) பெறுமதி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் எனவும் கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து இன்று சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டது என்று Read More

Read more