indiaLatestNewsTOP STORIESWorld

திருமண வீட்டில் கிணற்றில் தவறி வீழ்ந்த 13 பெண்கள் பலி!!

உத்தர பிரதேச மாநிலத்தில் திருமண வீட்டில் கிணற்றில் தவறி வீழ்ந்த 13 பெண்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஷிநகர் மாவட்டம், நெபுவா நவுராங்கியா பகுதியில் நேற்று (16) இரவு நடைபெற்ற திருமண நிகழ்வின் போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த சில பெண்கள் அங்குள்ள கிணற்றின் மீது போடப்பட்டிருந்த மூடியின் மீது அமர்ந்திருந்தனர்.

அதிகளவிலான பாரம் தாங்காமல் இரவு 8.30 மணியளவில் கிணற்றின் இரும்பு மூடி உடைந்து வீழ்ந்ததில் நீரில் மூழ்கி 13 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக உத்தர பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

திருமண வீட்டில் ஏற்பட்ட இந்த சம்பவம் குஷிநகர் மாவட்ட மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *