எரிவாயு கசிவு காரணமாக பாரிய தீ விபத்து….. 3000 கோழிகள் பலி!!
பன்னல பல்லேகமவில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 3000 கோழி குஞ்சுகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Read more