ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று விசேட நடைபெறவுள்ள கூட்டம்…… எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவுகள்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ (Gotabaya Rajapaksha) தலைமையில் இன்று விசேட கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பால் மா, எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட பல பொருட்களின் விலை உயர்வு குறித்து இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma),

“பல நாட்களாக உள்ள பால் மா தட்டுப்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை. டொலர் பற்றாக்குறையால் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பால் மா இருப்புக்களை வெளியிடுவதற்கு இடையூறுகள் உள்ளதால்,

உள்ளூர் சந்தையில் பால் மாவை வெளியிட முடியவில்லை என்று பால்மா இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில் வாழ்க்கை செலவு குழு ஒப்பந்தத்தில் ஒரு கிலோ பால் மாவின் விலையை ரூ .200 உயர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டது. 400 கிராம் விலையை 100 ரூபாவால் அதிகரிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த சில நாட்களாக எரிவாயு விலையும் பிரச்சினையாக உள்ளது. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக லாஃப் கேஸ் விலையை அதிகரிக்க அனுமதிக்கப்பட்டாலும், லிட்ரோ கேஸ் இன்னும் அதே விலையில் விற்கப்படுகிறது.

மேலும், சந்தையில் போதிய சீமெந்து இல்லை என நுகர்வோர் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கட்டுமானத் துறையில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது போன்ற பல பிரச்சினைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும்” என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *