கோட்டாபயவிற்கு இறுகும் நெருக்கடி- வருகிறது நம்பிக்கையில்லா பிரேரணை

Zoom தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகருக்கும் இடையில் கட்சித் தலைவர்களின் விசேட சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றது. சபாநாயகருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாச, லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்துமபண்டார, ரவூப் ஹக்கீம், ரணில் விக்கிரமசிங்க, ரிஷாத் பதியுதீன், எம். ஏ. சுமந்திரன் மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர். அலி சப்ரி மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் அரசாங்கம் சார்பில் இணைந்தனர். அரச தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. Read More

Read more

இன்றிரவு கோட்டாபயவின் விசேட அறிவிப்பு

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்றிரவு 9 மணிக்கு விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார். அவரது இந்த அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. நாட்டில் தற்போது அரசுக்கெதிரான மக்களின் போராட்டம் அதிகரித்துள்ள நிலையில் அரச தலைவர் விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.    

Read more

எரிவாயு ஏற்றும் பாரவூர்திகளுக்கும் தீ வைப்பு….. கேகாலையில் சம்பவம்!!

கேகாலை – மாவனெல்லை பகுதியில் லிட்ரோ எரிவாயு ஏற்றிச்செல்லும் 3 பாரவூர்திகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு எரிவாயு ஏற்றிச்செல்லும் 3 பாரவூர்திகள் நிறுத்தப்படும் முற்றத்திற்கும் அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர். குறித்த எரிவாயு ஏற்றிச்செல்லும் 3 பாரவூர்திகள் மஹீபால ஹேரத் என்பவருக்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது. அங்கிருந்த எரிவாயு சிலிண்டர்களும் அடையாளம் தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளன.   இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாவனெல்லை தீயணைப்பு பிரிவின் வாகனங்கள் மற்றும் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை Read More

Read more

வர்த்தக நிலையங்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் திறந்தாலும் மக்கள் நடமாட்டம் யாழில் பயங்கர வீழ்ச்சி!!

நாடு தழுவிய ரீதியில் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் யாழ்ப்பாண நகரத்தில் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன. அத்துடன, தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை என்பதுடன்  வர்த்தக நிலையங்கள் சில முழுமையாகவும் பெரும்பாலான நிலையங்கள் பகுதியளவிலும் திறந்துள்ளன. எனினும், மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது. இந்நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில், மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பிச் சென்றனர். அதேவேளை, பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் குறைவாக காணப்பட்டதுடன் ஆசிரியர்களும் சமூகமளித்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more

நா‌ட்டு நிலமையால் போராட்டத்தில் கண் கலங்கிய காவல்துறை அதிகாரி!!

குருநாகலில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த போது கடமையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் இளைஞர்களின் உணர்ச்சிகரமான பேச்சால் கண்கலங்கினார்.   இந் நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.   குருநாகலில் உள்ள பிரதமரின் ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். ஆனால் காவல்துறையினர் வீதித் தடைகளை அமைத்து தடுத்தனர்.   இதனை தொடர்ந்து, நாங்களும் உங்கள் பிள்ளைகள் போன்று தான் எங்கள் எதிர்காலத்திற்காக போராடுகிறோம் என தங்கள் இன்னல்களை காவல்துறையினருக்கு எடுத்துக்காட்டினார்கள்.   Read More

Read more

48 மணி நேரத்துக்குள் நிவாரணப் பொதியைப் பெற்றுக் கொள்ளலாம்!!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில், சில அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் மற்றும் அரிசிக்கு அதிக விலையை விதித்து அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். அதேவேளை, எந்தவொரு தனிநபரும் 1998 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு 48 மணி நேரத்துக்குள் நிவாரணப் பொதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே Read More

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமுலாகியது புதிய கட்டுப்பாடு

பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண மக்கள் இனி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்திலிருந்து(vip) பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.ஏ.சந்திரசிறி(Maj. Gen. (Retd.) GA Chandrasiri) தெரிவித்தார். இனிமேல், சலுகை பெற்ற உயரதிகாரிகள் மட்டுமே முனையத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுடன் பயணம் செய்யும் நண்பர்கள் உட்பட சாதாரண மக்கள் அந்த வளாகத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். Read More

Read more

பிருத்தானியாவில் இருந்து வந்த பெண் சடலமாக மீட்பு….. வீட்டில் இரத்த கறை!!

கிளிநொச்சி – அம்பாள்குளத்தில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பெண் வசித்து வந்த கிளிநொச்சி – உதயநகர் – அம்பாள்குளம் பகுதியிலுள்ள வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதேயிடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது – 67) என்ற  5 பிள்ளைகளின் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பிரித்தானியாவில் வாழ்ந்த வந்த குறித்த Read More

Read more

மூன்றாவது டோஸாக Pfizer பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

கொரோனா பரவலை தடுப்பதற்காக மூன்றாவது தடுப்பூசியாக பைசர் அல்லது பூஸ்டர் பெற்ற பிறகு ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளை பற்றிக் கவலைப்பட தேவையில்லை என சிறப்பு வைத்தியர் மல்காந்தி கல்ஹேனா (Malkanthi Kalhena) தெரிவித்துள்ளார். தடுப்பூசி உடலில் செயல்படுத்தப்படுவதால் சிறிய அறிகுறிகள் ஏற்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பைசர் தடுப்பூசியின் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் போது, கொவிட் போன்ற சிறிய அறிகுறிகள் மூன்று நாட்கள் வரை தோன்றும். உடல்வலி, தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி போன்றவை இதன் Read More

Read more

வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும்….. அஜித் நிவார்ட் கப்ரால்!!

புலம்பெயர்ந்த இலங்கைப் பிரஜைகள் தங்களின் உழைப்பினூடாக ஈட்டிய வருமானத்தை திருப்பி அனுப்புவதற்கு சட்ட ரீதியான வழி முறைகளை மாத்திரம் பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal)கேட்டுக்கொண்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இகு குறித்த தகவலை குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடுக்குக சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் எனவும் அஜித் நிவார்ட் Read More

Read more