மிகவும் கோலாகலமாக நடந்தேறின….. யாழ் உயர் தொழில்நுட்பவியல் நிறுவன(ATI Jaffna) வெள்ளி விழா கொண்ட்டங்கள்!!
யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின்(ATI Jaffna) இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழா நேற்றைய தினம் (04/12/2022) மிகவும் கோலாகலமாக,
smartயாழ் மத்திய கல்லூரியின் தந்தை செல்வா ஞாபகார்த்த மண்டபத்தில்,
காலை 9.00 மணியளவில் தொடங்கி இனிதே நடந்தேறியது.
குறித்த நிகழ்வானது,
யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சமிந்த மகேஷ் எதிரிசிங்க தலைமையில் நடைபெற்றது.
அத்துடன்,
உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் ஏ.கே கோஹிலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
கடந்த வாரம்,
வெள்ளி விழாவினை முன்னிட்டு இரத்ததான முகாமொன்றும் யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த இருபத்தைந்தாவது வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு,
கடந்த 29/11/2022(செவ்வாய்க்கிழமை) அன்று மாபெரும் நடை பவனி ஒன்றும் நடைபெற்றிருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.
இந்த நடைபவனி தொடர்பான முழுமையான விபரங்களை பார்வையிட இங்கே சொடக்குங்கள்…..
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வழிவகுக்கும் இந்த யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்திற்கு(ATI Jaffna) பலரும்
அது மென்மேலும் சிறக்க வேண்டுமென தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.