யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவன(SLIATE Jaffna) வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு….. மாபெரும் நடைபவனி!!

  1. யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின்(SLIATE) வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு

மாபெரும் நடைபவனி நாளையதினம்(29/11/2022) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறுள்ளது.

 

அதேவேளை,

எதிர்வரும் 04.12.2022 அன்று காலை 9.00 மணியளவில்

“தந்தை செல்வா கலையரங்கில் யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியின்(SLIATE) இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழாவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது,

யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சமிந்த மகேஷ் எதிரிசிங்க தலைமையில் நடைபெற உள்ளது.

 

அத்துடன்,

உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் ஏ.கே கோஹிலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை,

வெள்ளி விழாவினை முன்னிட்டு இரத்ததான முகாமொன்றும் கடந்த வாரம் யாழ் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *