சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்…… திறந்து விடப்பட்டன பல நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள்!!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை புத்தாண்டு வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் திறந்து விடப்பட்ட 6 வான்கதவுகளில் 4 வான்கதவுகள் அதிக மழைக்காரணமாக தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன.

அத்துடன்,

அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 5 வான்கதவுகளும் தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய அறிகுறிகள் உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *