முட்டை, இறைச்சி விலைகளின் மாற்றம் தொடர்பில்….. கால்நடை வைத்திய அதிகாரிகளிடமிருந்து புதிய தகவல்!!

நாட்டில் முட்டைக்கான தட்டுப்பாடு இல்லை.

முட்டையில் விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான அதிகரிப்பால் முட்டையை நுகர்வோர் கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிக்கைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாய் வரையில் அதிகரிக்கும் என கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.

கால்நடை வைத்திய அதிகாரிகளின் 32ஆவது வருட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு ​தெரிவித்தார்.

சந்தைகளில் முட்டையின் விலை 50 – 60 ரூபாயாகக் காணப்படுகிறபோதிலும் முட்டைக்கான கேள்வி கடுமையாகக் குறைவடைந்துள்ளது.

இதனால்,

முட்டை உற்பத்தியும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதால் முட்டையின் விலை கடுமையாக அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் பாரிய சவால்கள் காணப்படுகின்றன.

பிள்ளைகளின் மந்தபோசணை, ஊட்டச்சத்து குறைபாடுகள், உணவுகளுக்கான தட்டுப்பாடுகள் தொடர்பில் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிள்ளைகள்,

கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப் பால் வழங்கும் பெண்களுக்கும் இப்பிரச்சினை தாக்கம் செலுத்தியுள்ளது.

போசாக்கான உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவற்றைப் பெற்றுக்கொள்வதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

விலங்குகளிடமிருந்து கிடைக்க வேண்டிய புரதத்தை மக்களுக்கு தடையின்றி வழங்குவது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் அனைத்துப் பிரிவுகளின் பொறுப்பாகும்.

ஆனால்,

அதிகாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுகிறார்களே தவிர உணவுப் பாதுகாப்பு தொடர்பான எந்தவிதமான வேலைத்திட்டங்களும் அவர்களிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *