வீடுதேடி வருகிறது தடுப்பூசி – தயார் நிலையில் சிறப்பு நடமாடும் வாகனங்கள்!!

இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக மேல் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை இன்று வியாழக்கிழமை (12) முதல் இராணுவத்தினால் ஆரம்பிக்கப்படுகின்றது.

அதன்படி ஆரம்பகட்டமாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அவசியம் உடையவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக 10 சிறப்பு நடமாடும் வாகனங்கள் தயார் நிலையில் காணப்படுவதுடன், இராணுவ நோய் தடுப்பு மற்றும் மனநல மருத்துவ பணிப்பகத்தினை அல்லது 1906 , 0112860002 ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொண்ட பின்னர், தடுப்பூசிகள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

சமூகத்தில் முதியவர்கள், நோய் பாதிப்புக்களுக்குளானவர்கள், ஊனமுற்றவர்கள், பலவீனமானவர்களுக்கு கொவிட் – 19 தடுப்பூசி வழங்கலின் போது முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *