20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் சிரமம்….. உபுல் ரோஹண!!

இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கடந்த வாரம் நாட்டின் சில பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடரவுள்ள மாணவர்கள் பலர் எழுத்துபூர்வ அல்லது பிற ஆவணங்களுடன் விரும்பிய தடுப்பூசியை பெற முயற்சிப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண Read More

Read more

கொரோனா தொற்று உறுதியாகுபவர்களின் எண்ணிக்கை குறைவடைகின்ற போது தான் நாட்டை திறக்க முடியும்…… சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்பவரின் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது. 20 – 30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், தடுப்பசி வழங்கும் செயற்பாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. விரைவில் இந்த தடுப்பூசி திட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Read more

நாட்டில் தடுப்பூசி பெற மறுத்தால் நடப்பது என்ன!!

நாட்டில் தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் மட்டும் கொவிட்19 தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது. டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது. அத்துடன் வேகமாகப் பரவுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதை நாட்டு மக்களால் மட்டுமே தடுக்க முடியும். அவசரத் தேவை தவிர வீடுகளை விட்டு Read More

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சைனோபாம் தடுப்பூசிகள்!!

சீனாவிலிருந்து மேலும் 2.3 மில்லியன் டோஸ் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. அத்துடன் சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளும் நாட்டை வந்தடைந்துள்ளது. இதேவேளை நாடளாவிய ரீதியில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

தொடர்ந்து முடக்கப்படும் ஸ்ரீலங்கா?? ஏற்றுக்கொள்ளப்படுமா ரணில் விக்ரமசிங்கவின் கருத்து!!

இலங்கையில் கொவிட் வைரஸிற்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றிக்கொண்டவர்களுக்கு இலத்திரனியல் அட்டை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கம் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவது அவசியம் என முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் 2021ஆம் ஆண்டிற்கான அதிக பணவீக்க விகிதம் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது.

Read more

இராணுவ தளபதி வெளியிட்டுள்ள அறிவித்தல் – இது மட்டுமே வழி!!

“கொரோனாத் தொற்றிலிருந்து நாம் மீண்டெழ தடுப்பூசியே ஓர் அடைக்கலமாக உள்ளது என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா நிலவரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், கொரோனாத் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் தொகை நூற்றுக்கு 51 சதவீதமாக உயர்வடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பத்து இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நேற்று Read More

Read more

18 – 30 வயதுக்குட்பட்டோருக்கு அறிவிக்கப்பட்டது நாள்!!

செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து 18 – 30 வயதுக்குட்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சமித கினிகே இதை தெரிவித்தார். மேலும், இலங்கையில் 18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் 3.2 மில்லியன் பேர் உள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read more

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு பைஸர் தடுப்பூசி??

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு தடுப்பூசி செலுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். பைஸர் போன்ற தடுப்பூசியே சிறுவர்களுக்கு பொருத்தமானதென வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்களின் சங்கத்தினர் இது தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளனர். தொற்றா நோய் மற்றும் விசேட தேவையுடைய 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துமாறு அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Read More

Read more

ஜனாதிபதி வழங்கிய உத்தரவு – இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்!!

நாட்டில் மக்களுக்கும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கான செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மூன்றாவது தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு Read More

Read more

இன்று காலை இலங்கையை வந்தடைந்த பைஸர் தடுப்பூசி!!

இலங்கைக்கு சுமார் 80,000 பைஸர் தடுப்பூசி தொகுதி கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக இன்று அதிகாலை 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளது. இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more