TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

மீண்டும் அதிகரிக்கிறது எரிவாயு விலை!!

விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் ஒக்டோபர் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தத்தில் எரிவாயுவின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடந்த விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

தன் இளைய மகளுடன் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி!!

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘ரத்தம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை!!

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான நான்கு விமானங்கள் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு மணிக்கணக்கில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். சிங்கப்பூர், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக சென்றன. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பாகிஸ்தானின் லாகூர் நோக்கிப் புறப்படவிருந்த UL 153 என்ற விமானம் தாமதமானதால், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீண்டும் வீட்டிற்கு செல்ல நேரிட்டது. அதன்பின், இந்தியாவின் சென்னை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

சிங்கப்பூரில் விடுதியொன்றிலுள் மனைவியை கொலை செய்து….. சரணடைந்த இலங்கையர்!!

சிங்கப்பூர் விடுதியொன்றில் மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 30 வயது இலங்கையர் ஒருவர் சிங்கப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர், கட்டோங்கில் உள்ள விடுதியொன்றில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, அவரது கணவரே அவரை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 30 வயதான ஈஷான் தாரக கூட்டகே என்ற நபரே தனது மனைவி தியவின்னகே செவ்வந்தி மதுகா குமாரியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். இந்த சம்பவமானது நேற்று முன் தினம்(09/09/2023) காலை 10.45 மணி முதல் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஒரு மாத காலமாக மகளை காணவில்லை….. எங்கு தேடியும் கிடைக்காமல் கதறும் தந்தை!!

கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023(கலைப்பிரிவு) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த எனது மகள் புவனேஸ்வரன் ஆர்த்தி என்பவரை 05/08/2023 இல் இருந்து காணவில்லை என அவரது தந்தை புகா‌ர் செய்துள்ளார். இவரை, பல்வேறு இடங்களில் ஒரு மாத காலமாக தேடியும் இவரை பற்றிய எந்தவொரு தகவலும் எமக்கு கிடைக்க வில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது. யாராவது குறித்த சிறுமியை கண்டாலோ, அல்லது ஏதேனும் தகவல் தெரிந்தாலோ உடனடியாக அருகிலுள்ள காவல் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்…… தோண்ட தோண்ட வெளிவரும் மனித எச்சங்கள் மற்றும் துப்பாக்கிச் சன்னங்கள்!!

முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாக இன்று(11/09/2023) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கபட்டுள்ளது. அங்கு ஏற்படும் தவறுகளை சுட்டிக்காட்டியதன் பின்னணியில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கையில் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை ஆரம்பிக்கும் போது, மதிய உணவு நேரம் மற்றும் மாலை நிறைவடையும் நேரம் ஆகியவற்றின் போதே ஊடகவியலாளர் அருகில் சென்று வீடியோ புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இலங்கை கடற்பரப்பில் கரையொதுங்கியது அடுத்த வெளிநாட்டு கப்பல்!!

ஹம்பாந்தோட்டையில் இந்தோனேசிய கப்பல் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இந்தோனேசியாவின் செம்பகுங்கில் பதிவு செய்யப்பட்ட ஒலிம்பிக் என்ற கப்பலே சில நாட்களுக்கு முன்பு கரைஒதுங்கியுள்ளது. கடற்கரையில் இருந்து கப்பலை இழுத்துச்செல்ல முயன்ற இழுவைப்படகு குழுவினரின் முயற்சிகள் பலனளிக்காத நிலையில் இழுவைப் படகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இலங்கை கடற்படையினர் 2 நாட்களாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கிழக்கு மாகாணத்திற்கு மிக அருகில் நிலஅதிவுகள் பதிவு….. இது இதற்கான அறிகுறி!!

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் இருந்து 310 கிலோ மீற்றர் தொலைவில் கடலில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று (11/09/2023) அதிகாலை 1.29 அளவில் ரிக்டர் அளவுகோளில் 4.65 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், நில அதிர்வால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மக்களின் ஆலோசனைக்களையும் கேட்க இ.போ.ச. புதிய வழிமுறை அறிமுகம்!!

பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள போக்குவரத்து சேவைகளில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக புதிய திட்டமொன்றினை இலங்கை போக்குவரத்து சபை(SLTB)அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, தமது சேவைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய தொலைபேசி இலக்கத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த இலக்கங்களிற்கு தொடர்பு கொள்வதன் மூலமாக மக்கள் போக்குவரத்து சேவைகள் சம்மந்தமாக அவர்களுக்குள்ள முறைப்பாடுகளை தெரியப்படுத்த முடியும். அந்த வகையில், இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 1958 மற்றும் 0117 555 555 என்ற இலக்கங்களிற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடுகளை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

மொரோக்கோவில் வரலாறு காணாத நிலநடுக்கம்….. தரைமட்டமாகியுள்ள பல கிராமங்கள் – 2059 பேர் வரை பலி!!

ஆப்ரிக்க நாடான மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2000 ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை சுமார் 2059 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மராகேஷ் நகரின் தெற்கு பகுதிகளில் வாழும் மக்களே பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து மொரோக்கோ நாட்டின் மன்னர் ஆறாம் முகமது மூன்று நாட்கள் தேசிய துக்கத்தையும் அறிவித்துள்ளார். உயிர் பிழைத்தவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பிற உதவிகளை வழங்க Read More

Read More