முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்…… தோண்ட தோண்ட வெளிவரும் மனித எச்சங்கள் மற்றும் துப்பாக்கிச் சன்னங்கள்!!
முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாக இன்று(11/09/2023) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கபட்டுள்ளது.
அங்கு ஏற்படும் தவறுகளை சுட்டிக்காட்டியதன் பின்னணியில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கையில் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
காலை ஆரம்பிக்கும் போது, மதிய உணவு நேரம் மற்றும் மாலை நிறைவடையும் நேரம் ஆகியவற்றின் போதே ஊடகவியலாளர் அருகில் சென்று வீடியோ புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது மனித எச்சங்கள் மற்றும் துப்பாக்கிச் சன்னங்கள் என்பன கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.