மக்களின் ஆலோசனைக்களையும் கேட்க இ.போ.ச. புதிய வழிமுறை அறிமுகம்!!

பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள போக்குவரத்து சேவைகளில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக புதிய திட்டமொன்றினை இலங்கை போக்குவரத்து சபை(SLTB)அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி,

தமது சேவைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய தொலைபேசி இலக்கத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த இலக்கங்களிற்கு தொடர்பு கொள்வதன் மூலமாக மக்கள் போக்குவரத்து சேவைகள் சம்மந்தமாக அவர்களுக்குள்ள முறைப்பாடுகளை தெரியப்படுத்த முடியும்.

அந்த வகையில்,

இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி,

1958 மற்றும் 0117 555 555 என்ற இலக்கங்களிற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *