சிங்கப்பூரில் விடுதியொன்றிலுள் மனைவியை கொலை செய்து….. சரணடைந்த இலங்கையர்!!

சிங்கப்பூர் விடுதியொன்றில் மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 30 வயது இலங்கையர் ஒருவர் சிங்கப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர், கட்டோங்கில் உள்ள விடுதியொன்றில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, அவரது கணவரே அவரை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

30 வயதான ஈஷான் தாரக கூட்டகே என்ற நபரே தனது மனைவி தியவின்னகே செவ்வந்தி மதுகா குமாரியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.

இந்த சம்பவமானது நேற்று முன் தினம்(09/09/2023) காலை 10.45 மணி முதல் மாலை 4 மணியளவில் நடந்திருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை மற்றும் காட்சி மறுபரிசீலனைக்காக அவரை வெளியே அழைத்துச் செல்லவும்

அவரை ஒரு வாரம் காவலில் வைக்கவும் அரசுத் தரப்பு விண்ணப்பித்துள்ளது.

மேலும்,

குற்றம் சாட்டப்பட்டவர் மொழிபெயர்ப்பாளர் மூலம் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் சட்டத்தரணி ஒருவரை ஈடுபடுத்துவதற்கு பேசுமாறு கோரியதோடு

தமக்கு சட்டத்தரணி ஒருவரை வழங்குமாறு அரசிடம் கோரினார்.

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் செப்டம்பர் 18-ம் திகதி மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரின் கருத்து படி, குற்றம் சாட்டப்பட்டவர் நேற்று முன் தினம்(09/09/2023) 5 மணியளவில்

மரைன் பரேட்(Maraine Farod) அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று, விடுதியிலுள்ள தனது மனைவியைக் கொன்றதாக காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து,

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விடுதி அறையில் வெட்டுக் காயத்துடன் இருந்த மனைவியின் சடலத்தை மீட்டனர்.

அதேவேளை,

குறித்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் கத்தி ஒன்று விடுதி அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *